Skip to main content

யோகிபாபுவிற்காக 2 கோடி செலவில் பிரம்மாண்ட படப்பிடிப்பு தளம் !

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
yogi

 

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் 'தர்ம பிரபு'. பி.ரங்கநாதன் தயாரிப்பில் இயக்குனர் முத்துக்குமரன் இயக்கும் இப்படம் எமலோகத்தைப் பற்றிய நகைச்சுவை கலந்த படமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்காக 'AVM' ஸ்டூடியோவில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு தளம் போடப்பட்டுள்ளது. சுமார் 1 ½ லட்சம் வருடங்கள் பழமையான எமலோகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சொர்க்கம் மற்றும் நரகம் என்று தனித்தனியாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்படவுள்ளது.

 

 

 

மேலும், இந்த தளம் அமைப்பதற்கு கலை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஏறக்குறைய 200 பேர் கொண்ட குழு கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமால் உழைத்து வருகிறார்கள். வருகிற டிசம்பர் 14ம் தேதி  இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், மகன் எமனாக யோகிபாபு நடிக்க, அவருக்கு அப்பா எமனாக ராதாரவி நடிக்கிறார். சித்ரகுப்தனாக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், 'போஸ்' வெங்கட், சோனியா போஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு நடனமாடுகிறார். அதற்காக பிரத்தியோகமாக பிரம்மாண்ட தளம் அமைக்கப்படுகிறது. மேலும், அவருக்கென்று பிரத்யேகமான உடைகளும், ஆபரணங்களும் தயாராகி வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஜனனி ஐயருடன் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் யோகிபாபு

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
janani iyer

 

யோகி பாபு எமதர்மராஜாவாக நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தின் படப்பிடிப்பு சிறப்பாகவும், வேகமாகவும் நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி நடத்தப்பட்டது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

 

 

இப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். முத்துக்குமரன் படத்தை இயக்க, ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.

 

 

Next Story

'இப்படியொரு பிரம்மாண்ட செட்டை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவுள்ளது' - யோகிபாபு குழுவை பாராட்டிய எஸ்.பி முத்துராமன் 

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
spm

 

நடிகர் யோகிபாபு 'தர்மபிரபு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ.வி.எம்மில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான எமலோக செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டு உருவாவதால் இதில் யோகிபாபு யமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார். 'கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். பி.வாரி பிலிம்ஸ் சார்பில் பி. ரங்கநாதன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களை வைத்து கிட்டத்தட்ட 75 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் இருக்கும் அவரது அலுவலகத்திற்கு தினமும் வருவது வழக்கம். இதற்கிடையே யோகிபாபு எமதர்மராஜாவாக நடிக்கும் 'தர்மபிரபு' படத்திற்காக  எமலோக தளத்தை மிகப்பெரிய செலவில் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருவதை கேள்விப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அந்த தளத்தை பார்வையிட விரும்பி படக் குழுவினரிடம் கேட்டுள்ளார். 

 

 

இவ்வளவு பெரிய மாமேதை நம் தளத்தைப் பார்வையிட விரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றிக் காட்டினர். அதைப் பார்த்த அவர் இந்த ஏ.வி.எம். ஸ்டுடியோவில் எத்தனையோ பெரிய பெரிய தளங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அதெல்லாம் அந்த காலம். இக்காலத்தில் இப்படியொரு பிரம்மாண்ட தளத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாராட்டினார். மேலும், அப்படத்தின் கதையையும் கேட்டறிந்து, கதை நன்றாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெரும் என்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், முன்பெல்லாம் சிவாஜி கணேசன், என்.டி.ஆர்., ராஜ்குமார் போன்ற நடிகர்களின் படங்களுக்கான படப்பிடிப்பு தளங்கள் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் அடுத்தடுத்த தளத்தில் ஒரே நேரத்தில் நடக்கும். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். இப்பொழுது வெறிச்சோடி கிடக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு நடந்தாலும், அவர்கள் ஒருவருவரைப் பார்த்து ஒரு சிறிய வணக்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர் என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.