பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான “இரண்டாம் உலகப்போரின் குண்டு” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் குறித்து பேசியபோது....
![maari selvaraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/VEFNM67Gmn5Uk5Nmv5ShMgTDFwWuCgg_JjOPuFSt4e0/1574409828/sites/default/files/inline-images/Untitled_36.jpg)
"நீலம் புரொடக்சன் இதை மாதிரி நிகழ்வுகளை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனை கொண்டுவந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்க வைத்தாரோ, அதேபோல் இரும்பு கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. படத்தைப் பற்றி ரஞ்சித் அண்ணன் பேசி இருக்கிறார். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் பேசி இருக்கிறார். இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும். ஏனென்றால் இது மக்களை நம்பி எடுக்கப்பட்ட படம். அவர்கள் இப்படத்தை கைவிடமாட்டார்கள். இந்நிறுவனத்தின் மூன்றாவது படத்தை நான்தான் இயக்குவேன். நான் இதை கர்வத்தோடு சொல்வேன். ஏனென்றால் நான் நம்பும் அரசியல், மற்றும் கலையின் வழி எந்த சமரசமும் இன்றி படம் இயக்க இந்நிறுவனம் என்னை அனுமதிக்கிறது. இதுபோல் படம் செய்ய வேறெந்த நிறுவனம் அனுமதிக்காது." என்றார்