![hdhds](http://image.nakkheeran.in/cdn/farfuture/SjlRwKMF0F8dSXVDMxITKMYEuOmXu9tgxZ-UVitp_IE/1618999120/sites/default/files/inline-images/manishayadhav240518_9.jpg)
‘வழக்கு எண் 18/9’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா யாதவ். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே பொழுதை கழித்து வரும் இவர் தற்போது கரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...
"கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மற்றபடி எந்தவித பிரச்சனையும் இல்லை. இந்த நோயை முற்றிலும் தவிர்ப்பதை விட சிறந்தது எதுவுமில்லை என்று நான் கூறுவேன். அதனால் அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.