தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவரின் நிறைய படங்கள் குறிப்பாக நாட்டாமை, முத்து, படையப்பா உள்ளிட்ட படங்கள் இன்றும் பலருக்கு பிடித்தமான படங்கள் லிஸ்டில் இருக்கிறது. இப்படிப்பட்ட இயக்குனர் சமீப காலமாக படங்களை இயக்குவதை குறைத்துக்கொண்டு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி அவர் இந்தவருடம் வெளியான கோமாளி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
![ks ravikumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/4NknHr43XvTsMRYtCAUOznMtb0xRis0urVgPPBUObpo/1577776598/sites/default/files/inline-images/ks%20ravikumar.jpg)
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகி வசூல் செய்த படம் கோமாளி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கினார். கொஞ்சம் பொழுதுபோக்கு, கொஞ்சம் சோஷியல் மெசேஜ் என்று பக்கா கமர்ஷியல் படமாக இதை எடுத்திருந்தார். ரசிகர்களுக்கும் இந்த படம் பிடித்துப்போக, இந்த வருட தமிழ் சினிமா ஹிட் லிஸ்டில் கோமாளியும் ஒரு இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கோமாளி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அந்த படத்தின் இயக்குனருக்கு ரவிக்குமார் தங்க செயின் பரிசாக வழங்கியுள்ளார். இதை இயக்குனர் பிரதீப் ட்விட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டு, நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.