Skip to main content

நான்கு மொழிகளில் வெளியானது ‘கூச முனுசாமி வீரப்பன்’

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Koose Munisamy Veerappan Documentary Series released

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் இரண்டு ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

மேலும் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த 11ஆம் திரையிடப்பட்டது. சீரிஸை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்கினர். இதனிடையே ரஜினிகாந்த குறித்து வீரப்பன் பேசும் ப்ரோமோ வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாளான கடந்த 12ஆம் தேதி படக்குழு வெளியிட்ட நிலையில், அதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வந்தனர்.  

இந்த நிலையில் ‘கூச முனுசாமி வீரப்பன்’ சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் இன்று (14.12.2023) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். 

சார்ந்த செய்திகள்