
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் டிராகன் படம் முலம் பிரபலமடைந்த நடிகை கயாடு லோஹர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அவரிடம் தமிழ் பட பாடல் பாட சொல்லி ஒரு மாணவி கேட்க, அதற்கு ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை அவர் பாடினார்.
பின்பு பெண்களுக்கு உங்களுடைய அறிவுரை என ஒரு மாணவி கேட்க, அதற்கு பதிலளித்த அவர், “எல்லாரும் நம்மை நாமே முதலில் நம்ப வேண்டும். நான் என்னை நம்பியதால் தான் இங்கு நிற்கிறேன். நல்ல எண்ணத்தோடு முன்னேறுங்கள். அது உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.
பின்பு அவரிடம் செலிபிரிட்டி க்ரஷ் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று பதிலளித்தார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பின்பு மாணவ மாணவிகளுடன் சேர்ந்து ‘அப்படி போடு’ பாடலுக்கு நடனமாடினார். கயாடு லோஹர் டிராகன் படத்தை தொடர்ந்து அதர்வா நடிக்கும் இதய முரளி படத்தில் நடித்து வருகிறார்.