Published on 23/08/2021 | Edited on 23/08/2021
![hfdhdtjhfr](http://image.nakkheeran.in/cdn/farfuture/QIugKeU_sGmUI577ZbOo--bizRUHKdn5tC1pcaJQ7Qo/1629699727/sites/default/files/inline-images/0001-6402960396_20210822_220625_0000.jpg)
ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கிய ‘காஞ்சனா 3’ படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் ராகவா லாரன்சின் காதலியாக ரோஸி எனும் கதாபாத்திரத்தில் ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான அலெக்ஸாண்ட்ரா நடித்திருந்தார். இவர் கோவாவில் தனது காதலருடன் வசித்துவந்தார்.
இந்த நிலையில், கடந்த வியாழனன்று (19.08.2021) நடிகை அலெக்ஸாண்ட்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24 ஆகும். இவர், தனது காதலரைப் பிரிந்த மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை அலெக்ஸாண்ட்ராவின் மர்ம மரணம் குறித்து கோவா போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.