பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று முன்னர் அறிவித்திருந்த தனுஷ் பின்னர் டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று முடிந்த சினிமா ஸ்ட்ரைக் காரணமாகவும், கடந்த மாதம் வெளியாக வேண்டிய புதிய படங்கள் வரிசையாக அடுத்தடுத்து வெளியாக இருப்பதாலும் 'காலா' படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் பாடல்களை வரும் மே 9ம் தேதி வெளியிட இருப்பதாக தனுஷ் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் வரும் ‘செம வெயிட்’ என்ற சிங்கிள் பாடலை மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் தற்போது அறிவித்திருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சி காரணமாக ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.
Published on 30/04/2018 | Edited on 02/05/2018