Skip to main content
Breaking News
Breaking

பெண்களுக்கு கட்டளையிட்ட ஜோதிகா 

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
jyothika

 

 

 

'மகளிர் மட்டும்' படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா தற்போது ராதா மோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' படத்தில் நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, அவர்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை நடிகை ஜோதிகா தன் இரு கைகளிலும் பிடித்திருப்பது போல் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான பத்து கட்டளைகள் வருமாறு....

1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2.நீ விரும்புவதை செய்வாயாக.

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6.வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.

7.நீ சபதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக 

9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.

10.மனதில் பட்டத்தை சொல்வாயாக. என குறிப்பிட்டுள்ளனர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்