Skip to main content

'ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது' - பன்ச் பேசும் ஜெயம் ரவி 

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
jeyam ravi

 

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம் ரவி பேசியபோது....

 

 

 

"ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும், ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது. எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குனர்கள் தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்று வரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம், கேட்டதை விடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர். ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம் சி எஸ். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர் தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங். எம் குமரன் படத்துக்கு விஜி தான் வசனம் எழுதினார், மிகப்பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்கு தான் எழுதியிருக்கிறார், நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பது தான் இது சிறப்பு. ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பபே பிடித்தது. இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் அடங்க மறு. வரும்  21ஆம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போ தான் தமிழ் சினிமா நல்லா இருக்கும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெயம் ரவி ரொம்ப டெரரான ஆளுன்னு நினைச்சேன்’ நடிகை ராஷி கண்ணா சிறப்பு நேர்காணல் (வீடீயோ)

Published on 22/12/2018 | Edited on 22/12/2018

இமைக்கா நொடிகள், அடங்க மறு திரைப்படங்களின் நாயகி நக்கீரனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் வீடியோ இணைப்பு.

Next Story

'என் ஸ்கிரிப்ட்டை ஜெயம் ரவி தான் மாற்ற வலியுறுத்தினார்' - 'அடங்க மறு' கார்த்திக் தங்கவேல் 

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
adanga maru

 

'அடங்க மறு' படத்தை நாளை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது....

 

 

"சுஜாதா மேடம் ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய  ஆதரவாக இருந்தவர். அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து  வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது. மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என்றார்.