நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கரோனா தொற்று பரவலால், சூர்யாவின் சூரரைப் போற்று போன்ற படங்கள், ஒ.டி.டி தளங்களில் வெளியாகி வருகிறது. இருப்பினும் மாஸ்டர் படம், திரையரங்கில்தான் வெளியாக வேண்டுமென விஜய் ரசிகர்கள், படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் மாஸ்டர் படம் திரையரங்கில்தான் வெளியாகும் என கூறினார். இந்தநிலையில், மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டதாகவும், படம் நேரடியாக நெட்ஃப்ளிக்சில் வெளியாகுமா அல்லது முதலில் திரையரங்கில் வெளியாகுமா என முடிவாகவில்லை என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளதாக ஒரு தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தநிலையில், மாஸ்டர் படம் அமேசான் ப்ரைமிற்கு விற்கப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் படம் முதலில் திரையரங்கில்தான் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் குழப்படைந்துள்ளனர். மேலும் அவர்கள், படம் திரையரங்கில்தான் வெளியாகவேண்டுமெனவும், படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும் சமூகவலைதளங்களில், படக்குழுவுக்கு கோரிக்கை வைத்து #MasterOnlyOnTheatres என்ற வருகின்றனர்.