![‘Ethir Neechal’ Tara Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/-w7hK3gUxarC6w8glbya1kQsrO0yhEUlOBzMzv96QL4/1680088341/sites/default/files/inline-images/tara_0.jpg)
எதிர்நீச்சல் சீரியல் மூலம் பல குடும்பங்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ள குழந்தை நட்சத்திரம் தாராவுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
ஒன்றரை வயதில் இருந்து நான் நடித்து வருகிறேன். அதனால் கேமராவைப் பார்த்து பயம் கிடையாது. முதலில் பாசமலர் சீரியலில் நடித்தேன். அந்த கேரக்டரை இப்போது வரை மக்கள் நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சி. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும் சிறப்பு அனுமதி வாங்கி நடிப்பில் ஈடுபடுகிறேன். என்னுடைய தாத்தாவும் பாட்டியும் தான் எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தது. அவர்களால் தான் இப்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன். தாராவாக இருக்கும் நான் நடிப்பில் நயன்தாரா தான்.
ஷூட்டிங் நடக்கும்போது சீரியஸாக இருந்தாலும் ஷூட்டிங் முடிந்த பிறகு செட்டில் அனைவரும் ஜாலியாக விளையாடுவோம். சினிமா வாய்ப்புகளும் வந்தன. லாக்டவுன் நேரமாக இருந்ததால், வெளியூரில் ஷூட்டிங் இருந்ததால் போக முடியவில்லை. கலெக்டராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. இப்போதைக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் சார் கேமராவுக்கு முன்னால் தான் டெரராக இருப்பார். ஆனால் ஷாட் முடிந்தவுடன் ஜாலியாக மாறிவிடுவார். என்னோடு நன்கு விளையாடுவார். அனைவரோடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துள்ளேன். அவரோடும் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் பிறந்த நமக்கு மற்ற மொழிகள் தெரியவில்லை என்று வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தமிழ் நன்கு தெரிந்தால் போதும். எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ விஜய் சார் தான். சமீபத்தில் வாரிசு படத்தில் அவருடைய நடிப்பு சூப்பராக இருந்தது. அந்தப் படத்தின் பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடித்த ஹீரோயின் பற்றிக் கூறுவது கடினம். ஏனென்றால் நானே ஒரு ஹீரோயின் தான்.