Skip to main content

பிரபல இயக்குநருடன் கை கோர்க்கும் கார்த்தி

Published on 17/04/2025 | Edited on 17/04/2025
karthi new film with sundar c

கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இப்படங்களை அடுத்து டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் கார்த்தி புதிதாக சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

karthi new film with sundar c

சுந்தர் சி. தற்போது கேங்கர்ஸ் படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அடுத்து விஷாலுடன் மீண்டும் இணையவிருந்தார். அப்படம் விஷாலின் சம்பள பிரச்சனை காரணமாக அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்