Skip to main content

அஜித் ரசிகர்களுக்கோர் நற்செய்தி... இயக்குனர் 'சதுரங்க வேட்டை' வினோத் அறிவிப்பு!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018

நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் படப்பிடிப்பு முடிந்து பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டு, தயாராகி வருகிறது 'விஸ்வாசம்'. ரஜினிகாந்த்தின் 'பேட்ட' படமும் பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இன்று பேட்ட போஸ்டர் வெளியானது. ரஜினிகாந்த், சிம்ரன் இருவரும் இருக்கும் அந்த போஸ்டர் இணையத்தைக் கலக்கிவருகிறது. ரஜினி, அஜித் இருவரின் படங்களும் பொங்கலுக்கு வருகிறதா என்று குழப்பத்துடனும் ஒரு சாராரும் மகிழ்ச்சியுடன் ஒரு சாராரும் இருக்க, அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு முக்கிய அறிவிப்பை ட்வீட் செய்துள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத்.

 

h.vinoth

 

 

h.vinoth tweet


சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய மிகச் சிறந்த வெற்றிப் படங்களைக் கொடுத்த வினோத் தனது அடுத்த படத்தின் நாயகன் அஜித் என முன்பே தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக் என்று கூறப்பட்ட நிலையில், 'பிங்க்' படத்தின் கதையைப் பார்த்த அஜித் ரசிகர்கள், அதில் அமிதாப் பச்சன் பாத்திரம் முக்கியமானது என்றாலும், மிகவும் சிறியது என்பதால் குழப்பத்தில் இருந்தனர். இதைப் போக்கும் வகையில் 'தல59' பிங்க் ரீமேக் அல்ல என்று இயக்குனர் வினோத் ட்வீட் செய்துள்ளார்.                

 

 

 

சார்ந்த செய்திகள்