சாணக்யா, வாத்தியார், துரை போன்ற படங்களை இயக்குநரும் விஜய், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார், அருண்விஜய், சிம்பு போன்ற பெரிய நடிகர்களை இயக்கியவருமான இயக்குநர் ஏ.வெங்கடேஷ். சமீபகாலமாக பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு புறமிருக்க மீண்டும் இயக்குதல் பக்கம் கவனம் திரும்பியவர் தில்ராஜா என்ற படத்தை இயக்கியிருக்கிறார்,
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சத்யா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "தில்ராஜா படம் மூன்று நாளில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடக்கக் கூடிய சம்பவம்தான் . பேரைச் சொன்னால் கொஞ்சம் ஈர்க்கும் விதமாக இருக்கம், அதுதான் டைட்டில் இப்படி வைக்க காரணம். வாழ்க்கையில் எல்லாரும் தைரியமானவர்கள்தான், ஆனால் அனைவருக்கும் ஒரு லிமிட்டேஷன் இருப்பதால் அதை வெளியே காண்பிக்க முடியாது. அதையும் மீறி ஒரு விஷயம் வரும்போது எல்லோரும் தில்ராஜா தான். வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது வைரலாகியது அதைப் இப்படத்தின் பாடலில் வைத்தால் ஈர்க்கும் விதமாக இருக்கும் என நினைத்து வைத்ததுதான். ஆனால், படத்தின் பெயருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை சந்திக்க முற்பட்டபோது பார்க்க முடியவில்லை”.
“பிரபலமான நடிகைகள் என்னுடன் நடிக்க வருவார்களா எனத் தெரியவில்லை. மிகவும் பிரபலமாக இருப்பவர்களுடன் எங்கள் படக்குழு நடிக்க மாட்டார்கள், அந்த மாதிரி பிரமாண்ட படமும் பண்ணவில்லை, செரினை கமிட் பண்ணியதில் எனக்கு சந்தோஷம் தான், மேலும் இப்படத்தில் சம்யுக்தா, இமான் அண்ணாச்சி, பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகும், இதுதான் என்னுடைய வாழ்க்கை என நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இயக்குநர் நிறைய வெற்றியை பார்த்தவர் நான் எதுவுமே இன்னும் பார்க்கவில்லை, அதனால் அப்படியே அவரிடம் சரண்டர் ஆகிவிட்டேன் இனி நடப்பதை எதிர்பார்த்து கடவுள் மேல் பாரத்தை வைத்து விட்டேன்" என்றார்