தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையான நடிகராக வலம் வருகிறார் தனுஷ். நடிகர் மட்டுமல்லாது பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பன்முகக் கலைஞனாக இருந்து வருகிறார். அசுரன் படத்திற்குப் பிறகு நூறு கோடி வசூல் செய்யும் நாயகர்களின் பட்டியலிலும் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் கதை சொன்னபோது வேண்டாம்னு சொல்லிடலாம்னு தான் கதை கேட்டேன் என்று பேசினார்.
கொரோனா லாக் டவுன் காலத்தில் வேலை இல்லாமல் டிப்ரசனில் இருந்தபோது... கதை சொல்ல வந்தாரு வெங்கி அட்லூரி. இப்ப என்ன கதையை கேட்குறது நோ சொல்லிடலாம்னு தான் கேட்க ஆரம்பிச்சேன். அவர் கதை சொல்ல சொல்ல கேட்டுக் கொண்டே இருந்த நான்... கதை சொல்லி முடிச்சதும் உங்களுக்கு எப்ப டேட்ஸ் வேண்டும் என்றுதான் கேட்டேன். ஏன் கேட்டேன் என்றால் கதையைத் தாண்டி அதில் இருந்த மெசேஜ்., அந்த மெசேஜ் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. அந்த படத்துல நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன்; பண்ணியிருக்கோம். ரசிகர்களுக்கெல்லாம் பிடிக்கும்னு நம்புறோம்.
வாத்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை வழங்கிய திரைப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு நன்றி. என் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. உடன் நடித்த சம்யுக்தாவிற்கு நன்றி... என்று உடன் நடித்த அனைத்து நடிகர்கள் பெயர்களைச் சொல்லி நன்றி தெரிவித்தார்.