Skip to main content

தனுஷின் 52வது பட அப்டேட் வெளியீடு

Published on 17/09/2024 | Edited on 18/09/2024
dhanush 51 movie update

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் தனுஷ், சமீபத்தில் தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில்  ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா, நாகர்ஜூனா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தனுஷின் 51வது படமாக உருவாகி வருகிறது. இதனிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கும் இளையராஜா பயோ பிக்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தையும் பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில்‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தையும் கைவசம் வைத்துள்ளார்.

இதனிடையே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் ஆகியோர்களுடன் இணைந்து தனுஷின் சகோதிரி மகன் பவிஷ் நாராயணும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
  
இந்நிலையில் தனுஷின் 52வது திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ்(Dawn Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களின் அறிமுக படத்தில் தனுஷ் தனது 52வது படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்த அருமையான வாய்ப்பை கொடுத்த தனுஷுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்