Skip to main content

'கோப்ரா' படம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

cobra movie new update out now

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இதனிடையே படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளதால் அடுத்த வாரத்தில் கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.   

 

 

 

சார்ந்த செய்திகள்