
தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி (வயது 65) மாரடைப்பால் சென்னையில் நேற்று (11.04.2024) மாலை காலமானார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், சிங்கம், லிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் அருள்மணி நடித்துள்ளார். அதில் இயக்குநர் தங்கர் பச்சானின் அழகி படம் அருள்மணிக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு கவனிக்கத்தக்க இடத்தை கொடுத்தது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக இவர் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், திரையுலகினர் எனப் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.