
ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கழிப்பறை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாநடைபெற்று முடிந்தது.
இவ்விழாவினில் பாடகர் உன்னி கிருஷ்ணன் பேசியதாவது, “இது மிக முக்கியமான தருணம், அமீத் சார் ஃபேமிலி எனக்கு மிக நெருக்கம், அவர்களின் பட விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இயக்குநர் கிஜு போன் செய்து, ஒரு டூயட் சாங்க் இருக்கு என்றார், அமீத் சார் பெண் தான் பாடப்போகிறார் என்றார், அவர் குரல் மிக அருமையாக இருந்தது, அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தது, அவருக்காகத் தான் இந்தப்படத்தில் நான் பாடினேன்.
ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கிஜுவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த டீம் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.