
இந்தியில் ஹிதேஷ் பாட்டியா இயக்கத்தில் ‘டப்பா கார்ட்டல்’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதில் ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 28 முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சீரிஸின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் படக்குழுவினர் பங்கேற்று சீரிஸ் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்தனர். அந்த வகையில் ஷபானா ஆஸ்மி, பேசுகையில் ஜோதிகாவை இந்த சீரிஸில் இருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த சீரிஸில் இரண்டு பெண்களை வெளியேற்ற முயற்சித்தேன். அவர்களில் ஒருவர் ஜோதிகா. ஆனால் இது அவருக்கு தெரியாது. மற்ற பெண்களும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஜோதிகாவை நாங்கள் மாற்ற மாட்டோம் என சொன்னார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன். உண்மையிலே அப்படி நினைத்தது என் தவறு. அவரை வெளியேற்றியிருந்தால் அவருடன் பணிபுரியும் மகிழ்ச்சியை நானே பறித்திருப்பேன்” என்றார்.