Published on 04/05/2023 | Edited on 05/05/2023

அதர்வா - மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மத்தகம்'.
ஸ்க்ரீன் சீன மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்,

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் முருகேசன் கூறுகையில், "30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் மத்தகம். ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தைப் படம் பிடித்தது சவாலானதாக இருந்தது" என்றார்.