![vsddb](http://image.nakkheeran.in/cdn/farfuture/62yJROj49PqMNAehuj1nGFbVSLISk5TGJQSlEDaR6v8/1613457064/sites/default/files/inline-images/Poster_11_e_2.jpg)
அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அரிதான கதையை இயக்கியுள்ளார் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல். அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா - மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்துக்கு 'அன்பிற்கினியாள்' என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் அரங்குகள் போடப்பட்டு, அதில் ஏற்படும் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். 'அன்பிற்கினியாள்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராது நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியன் அப்பாவாக நடித்துள்ளார். கோடை விடுமுறைக்குத் இப்படம் திரைக்கு வரவுள்ளது.