Published on 30/07/2024 | Edited on 30/07/2024
![ar murugadoss helped to director rasu madhuravan family](http://image.nakkheeran.in/cdn/farfuture/-RRw0ji1OkexrJ6Ak7WiCZaANYX-UUBMV2FS5b8VZjM/1722340401/sites/default/files/inline-images/213_22.jpg)
பிரசாந்த், ரம்பா நடித்த பூ மகள் ஊர்வலம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராசு மதுரவன். தொடர்ந்து பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்துக்காக உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தை இயக்கியிருந்தார்.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் அவர் காலமானார். இதனால் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளியானது. அவருக்கு ஒரு மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களது சூழ்நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் ராசு மதுரவின் மகள்களின் கல்விக்கு உதவினார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் ராசு மதுராவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் மூலம் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.