Skip to main content

 “கான்ட்ரோவெர்ஸிக்கு ஸ்பெல்லிங்கே தனுஷ் என்று சொல்கிறார்கள்”- தனுஷ்

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

dhanush


மாரி 2 படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது அப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான தனுஷ் பேசியது, “ இந்த படம் உலகத்தரம் வாய்ந்த, இப்படத்தை பார்த்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் எடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க தமிழ் ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட வணிகப்படம்தான். அனைவரும் குடும்பத்துடன் வந்து ரசித்து பார்க்கும் படம்தான். முதல் பாகத்தில் மாரியை சுற்றியே கதை நகரும், ஆனால் இதில் அப்படி இல்லாமல் மாரியை தாண்டி பலரின் கதாபாத்திரத்தை சுற்றி கதை நகரும். இந்த படத்தில் ஒரு அழுத்தமான கண்டண்ட் உள்ளது, ஒரு அழுத்தமான எமோஷனல் உள்ளது. இப்படம் பொழுதுபோக்கு சினிமா என்று சொல்லப்படுவதை நியாயப்படுத்தும். வடசென்னை அன்புவாக நடிப்பதில் சிரமம் அவ்வளவாக இல்லை, சிறிது கில்ட்தான் இருந்தது. ஆனால், மாரி படத்தில் நடிப்பது அதைவிட கஷ்டமான ஒரு விஷயம். பாலாஜி சொல்வதுபோல்,  ‘மாரிக்கு யாரையும் பிடிக்காது, அவனையும் வேறு யாருக்கும் பிடிக்காது. அவன் நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை.’ இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கையில் அது பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக பிடிக்க வேண்டும். நான் எந்த படத்திற்கும் இவ்வளவு ஹோம் வொர்க் செய்ததில்லை. பாலாஜி மாண்டாஜ் சொல்லும்போது, குழந்தைகள் பலூன் விளையாடும் அதை நீங்கள் உடைக்க வேண்டும் என்பார். என்னை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மிகவும் தயங்கினேன். அவர் இந்த காட்சியெல்லாம் வொர்க்கவுட் ஆகும் என்று மிகவும் நம்பினார். இதன் பின் உங்களுடன் இரண்டு பேர் இருப்பார்கள், அவர்களை நீங்கள் அடித்துகொண்டே இருக்க வேண்டும். அதில் ஒரு கதாபாத்திரம் ரோபோ ஷங்கர் நடிக்கிறார் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் எப்படி அடித்துகொண்டே இருப்பது. பார்ப்பவர்கள் நம்புவார்களா என்ற கேள்வி எனக்கு தோண்றியது. அதனால் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று நான் ஒற்றைக்காலில் நின்றேன். நான் அடித்தால் வாங்குவது போன்ற சைஸில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்றேன். அப்போதும் பாலாஜிதான் இந்த கதாபாத்திரத்திற்கு ரோபோதான் சரியாக இருப்பார் என்று அழுத்தமாக இருந்தார். அதன்பின் ரோபோவை அடித்தால் பார்வையாளர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக ஹோம்வொர்க் செய்தேன். மாரி-2வில் மிகவும் சிரமப்பட்டேன் என்றால் நான் அழுகவே கூடாது, ஆனால் எனக்கு எதிராக இருக்கும் சாய் பல்லவி அழுதுகொண்டே இருப்பார். நான் அழுகவே கூடாது ஆனால் அந்த எமோஷனை பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் அனைவரும் எதிர்பார்பதை தாண்டி இந்த படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. 

 

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தபோது செல்வராகவனும், யுவன் சாரும்தான் நெருங்கிய நண்பர்கள். செவராகவனுடன் அடிக்கடி அவரது ஸ்டூடியோவுக்கு செல்வேன். ஆள் அடையாளம் தெரியாமல் எடுத்த அந்த படத்திற்கு அப்போது அடையாளமாக இருந்தவர் யுவன் தான். அவருடைய ஆட்டிடூட் அனைத்தும் ஒரு ஹீரோ போன்று இருப்பார். யுவனுடைய இசையால்தான் அந்த படம் ஓடியவது, மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. அந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால் கண்டிப்பாக நான் நடுத்தெருவில்தான் இருந்திருப்போம். அந்த இசைக்கு நாங்கள் பெரும் அளவில் கடமைபட்டிருக்கிறோம். என்னுடைய நடிப்பிற்கு அஷ்திவாரம் போட்டுக்கொடுத்தது செல்வராகவன்தான். அதைபோல நான் நடித்த முதல் இரண்டு படங்கள் ஓட அஷ்திவாரமாக இருந்தவர் யுவன்தான். இன்று அவர் சொல்கிறார், எனக்கு ஒரு அழுத்தம் தேவைப்பட்டது அதை மாரி-2 தந்திருக்கிறது என்கிறார். அதெல்லாம் எங்களுக்கு தெரியவில்லை. 90களில் இருந்து 23 வருடங்கள் வரை எதிர் பக்கம் இருந்தவர்களின் பெயர் மாறிகொண்டே இருக்கும் ஆனால் இந்த பக்கம் யுவன் ஷங்கர்ராஜா பெயர்தான் இருக்கும். இது நிஜம்தான். இது யாரையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மண்ணித்திவிடுங்கள். இதுதான் உண்மை. மூன்றாவது தலைமுறைகளுக்கு இன்னும் இசை அமைத்துகொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஒரு ஃபேனாக அவருடன் வேலை பார்த்தேன்.

 

நான் மாரியாக இருக்கும்போதுதான் மிகவும் சந்தோசமாக இருப்பேன். நிஜ வாழ்கையில் பலர் நம்மை சீண்டுவார்கள் அப்போதெல்லாம் பல்லை கடித்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால், மாரியாக இருக்கும்போது என்னை சீண்டிய பெர்சனாலிட்டியை நினைத்து அடிதாங்கியை அடிப்பேன். நான் கூட யோசித்தேன் மாரி கெட்டப்பில் வந்து பேசிவிடலாம் என்று. பிறகு யோசித்தேன் சர்ச்சைக்கு ஸ்பெல்லிங்கே தனுஷ் என்று சொல்கிறார்கள். எதுக்கு இதுக்குமேல வெறும் வாயுக்கு அவல் சாப்பிட கொடுக்கனும் கடைசி நிமிடத்தில் அந்த ஐடியாவை விட்டுவிட்டேன். அந்த மாதிரியான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்த படத்தின் வெற்றி மாரி-3ஆம் பாகத்தை தீர்மானிக்கும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்