![akhanda 2 update](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qtl3POplKXD-QOgKdkOQttDXeSnimVO-EJAPf1PS1EA/1729088644/sites/default/files/inline-images/416_10.jpg)
தெலுங்கில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் நடிப்பில் பொயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் அகண்டா. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகிறது.
'அகண்டா 2- தாண்டவம் ' என்ற தலைப்பில் இந்தப் படம் உருவாகும் நிலையில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்க பொயபட்டி ஸ்ரீனு இயக்க ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா தயாரிக்கின்றனர். இதன் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார். அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார். நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை வெளியிட்டார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.