Published on 06/01/2021 | Edited on 06/01/2021
‘தேவர் மகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று சின்னத்திரையில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் நடிகை நீலிமா ராணி. சமூக வலைதளங்களில் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக நடிகை நீலிமா ராணி ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ஆபாசமாகக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலித்த நீலிமா ராணி, "கொஞ்சம் நாகரிகத்தை எதிர்பார்க்கிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார். மற்றவர்களைத் தவறாகப் பேசுவது வக்கிரப்புத்தி. தயவுசெய்து மனோதத்துவ நிபுணரைப் பாருங்கள். உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.