Skip to main content

“நான் போருக்குச் செல்வதைப் போல உணர்கிறேன்”- நடிகை மீனா! 

Published on 01/10/2020 | Edited on 02/10/2020

 

meena


பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் அணமையில் கேரளாவில் தொடங்கியது. 

 

இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் மீனாவே நடிக்கிறார். அதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில், கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து பி.பி.இ உடை அணிந்து கேரளாவுக்கு விமானத்தின் மூலம் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து அது எவ்வாறு இருக்கிறது என்பதைக் கேட்டுள்ளார்.

 

அதில், “நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போல உணர்கிறேன். 2 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்றதாகவும் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Though I look like traveling to space, I feel like going to war. Traveling after 7 months.... Surprised to see the airport so calm and quiet deserted. Even more surprised to see not many were dressed like me ? I must say it was the most uncomfortable outfit. Was so hot and stuffy,makes you sweat even when the weather is cool and air con on. Can't even wipe your face, especially with the gloves ? Hats off to all the health workers who live in this PPE outfit day in and day out. In spite of so much discomfort they still understand our pain and take care of us all the time. My respect for them has magnified ?? Thank you for your selfless effort to humankind.

A post shared by Meena Sagar (@meenasagar16) on

 

பலரும் என்னைப் போல உடையணியாமல் இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகவும் வசதியற்ற ஆடை என்று சொல்வேன். குளிர்ந்த வானிலையும், ஏ.சி.யும் இருந்தபோதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும், வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இந்த ஆடை உள்ளது. முகத்தைக் கூட துடைக்க முடியவில்லை. குறிப்பாகக் கையுறைகள்.

 

Ad

 

இரவு பகலாக இந்த பி.பி.இ கவச உடையுடன் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலைவணங்குகிறேன். இத்தகைய சிரமத்திலும் அவர்கள் நமது வலியைப் புரிந்துகொண்டு, நம்மை எப்போதும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அதிகமாகி விட்டது. மனித இனத்துக்கும் நீங்கள் செய்துவரும் தன்னலமற்ற சேவைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்