![Venu Arvind](http://image.nakkheeran.in/cdn/farfuture/5sUPMMjrCw8X_RXUsbRk53OcpXLrb14PxYoh9lUPDrs/1627543905/sites/default/files/inline-images/86_6.jpg)
'காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘கிரீன் சிக்னல்’, ‘காசளவு நேசம்’, ‘காதல் பகடை' உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வேணு அரவிந்த். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘செல்வி’, 'வாணி ராணி’, ‘அக்னி சாட்சி’, ‘சந்திரகுமாரி’ ஆகிய சீரியல்களில் அவரது கதாபாத்திரங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு சமீபத்தில் மூளையில் கட்டி இருப்பது மருத்துவப் பரிசோதனை ஒன்றில் தெரியவந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேணு அரவிந்திற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வேணு அரவிந்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. வேணு அரவிந்த் விரைவில் குணமடைய வேண்டும் என சின்னத்திரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.