பாரதிராஜா இயக்கத்தில் 1978ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் ஹீரோவாகி அறிமுகமானவர் நடிகர் சுதாகர். பின்பு 'நிறம் மாறாத பூக்கள்', 'சுவரில்லாத சித்திரங்கள்' என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து 80 காலகட்டத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தார்.
இப்போது தெலுங்கில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 64வயது நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் மறைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்த தகவல் வைரலாக பரவ அதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சுதாகர்.
அந்த வீடியோவில், "நீங்கள் என்னைப் பற்றி படிக்கும் அனைத்தும் பொய்யான செய்திகள். தயவு செய்து அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மற்றும் நன்றாக இருக்கிறேன்" என பேசியுள்ளார்.