Published on 25/11/2022 | Edited on 25/11/2022



இலங்கையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு திரைப்படம் ‘யாளி’. குறைந்த பொருட்செலவில் இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு வெளியான இந்தத் திரைப்படம் இலங்கையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனையொட்டி, இப்படத்தின் சிறப்புக் காட்சி, ஆல்ஃபா ஹெச்.டி. கனடா ஐஎன்சி தொலைக்காட்சியின் சார்பில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. இதில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாளி படத்தினை பார்த்துப் பாராட்டியதோடு, படக்குழுவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய படத்தின் எடிட்டர் கிறிஸ்ட் ராஜ்குமார், யாளி திரைப்படம் வரும் ஜனவரி மாதம் கனடாவில் திரையிடப்பட உள்ளதாகவும், இந்தநிகழ்வில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.