



அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அவரது 25வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஜெயம் ரவியும் இணைந்திருக்க அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக ‘எஸ்.கே.25’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படம் அவருக்கு நூறாவது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்திற்காக முதல் பாடலை பாடகி தீ குரலில் முன்னதாகவே பதிவு செய்துவிட்டனர். படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.