Published on 16/09/2022 | Edited on 16/09/2022





மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனையொட்டி படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.125 கோடிக்கு வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.