Published on 28/10/2022 | Edited on 28/10/2022
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இப்போது 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்று (28.10.2022) சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் ஹரிஷ் கல்யாண், பெற்றோர்களால் தனக்கு நிச்சயிக்கப்பட்ட நர்மதா உதயகுமார் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிரியா பவானி ஷங்கர், பிந்து மாதவி உள்ளிட்ட திரை பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.