Published on 20/06/2022 | Edited on 20/06/2022







வலிமை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகப் படக்குழு குஜராத்தில் மையமிட்டுள்ளனர்.
இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக லண்டன் சென்றுள்ள அஜித் குமார் அங்கு பைக் ரேசர் குழுவுடன் பைக் ரைட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் இருக்கும் பல சுற்றுலா தளங்களில் தனது நன்பர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.