








தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில் திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் இன்று (11.1.2022) வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.