கேரளாவையே உலுக்கிய நரபலி சம்பவம் பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
கானாமல் போன, பத்மாவை கண்டுபிடிக்க சென்ற போலீஸ் முகமது ஷபியையும், பகவத் சிங்கையும் பிடித்து விசாரிக்கின்றனர். பொருளாதாரத்தில் அதிகப்படியான வருவாய் வருவதற்காக நரபலை பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என பகவத் சிங்கிடம் ஷபி சொல்லி 6 லட்ச ரூபாய் வாங்குகிறார். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
இதையடுத்து, காணாமல் போன பத்மாவிடம் பண ஆசையை காட்டி இலத்தூர் என்று பகுதிக்கு முகமது ஷபி அழைத்து வருகிறார். அங்கு பத்மாவை ஏமாற வைத்து, அவரின் உடல் முழுவதும் கயிற்றால் கட்டி விடுகிறார். அங்கிருந்து முகமது ஷபியினுடைய இரண்டாவது மனைவி லைலாவிடம் கத்தியை கொடுத்து பத்மாவை வெட்ட சொல்கிறார். அதன்படி லைலா, பத்மாவினுடைய பிறப்புறப்பில் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்துள்ளார். பத்மா சாவதற்கு முன்பே, அவரை பலவிதமான சித்ரவதைகளை செய்து கொலை செய்திருக்கிறார்கள். மார்பகம், பிறப்புறுப்பு என தனித்தனியாக வெட்டி 56 பாகங்களாக வெட்டி கூறு போடுகிறார்கள். அந்த தோட்டத்தில் பல இடங்களில் குழிகளை வெட்டி அந்த உடல் பாகங்களை புதைக்கிறார்கள் என்று போலீசாருக்கு தெரிந்தது. 3 மாதங்களுக்கு முன்பு லாட்டரி டிக்கெட் விற்கும் ரோஸ்லின் என்ற பெண்ணை இந்த சம்பவத்தை போலவே செய்திருக்கிறார்கள் என்ற உண்மையை முகமது ஷபி சொல்கிறார். இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் ரோஸ்லின், கணவனுடைய ஏற்பட்ட மனக்கசப்பால், குழந்தைகளோடு ரோஸ்லின் தனியாக வாழ்ந்து வந்தார். உத்தரப் பிரேதசத்தில், இருக்கும் அவருடைய மகள் மஞ்சு, கேரளாவிற்கு வரும்போது அம்மா ரோஸ்லின் மாயமாக இருப்பது தெரியவருகிறது. ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் மாதத்தில் காலடி போலீஸ் ஸ்டேசனில் மஞ்சு கம்பிளைண்ட் கொடுக்கிறார். அந்த புகாரின் போலீசார் தொடர் விசாரித்து வந்தபோதும், எந்த தகவலும் கிடைக்காத காரணத்தினால் அந்த கேஸை பொறுமையாக நகர்த்துகிறார்கள்.
இந்த சமயத்தில் பத்மா பற்றி போலீஸுக்கு தெரியவருகிறது. ரோஸ்லின் என்ற பெண்ணை பல பாகங்களாக வெட்டி புதைத்துவிட்டு, பத்மாவினுடைய 10 கிலோ சதையை எடுத்து முகமது ஷபி தன்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்துவிடுகிறார். இளமை, ஆரோக்கியம் கிடைக்கும் என்பதால் அந்த சதையை ஷபியும், லைலாவும் சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். பகவத் சிங், இதை சாப்பிட மறுத்த போதும் லைலா வலுக்கட்டாயமாக சாப்பிட வைக்கிறார். இது மாதிரியான மனித உடல்களை பல கோடி அளவில் வாங்குவதற்கு ஆட்கள் இருக்கிறது என்று பகவத் சிங்கிடம் ஆசைகாட்டி, மீதமுள்ள பத்மாவினுடைய சதையை பிரிட்ஜில் வைத்திருக்கிறார்கள். சொல்லப்பட்ட வியாபாரி யாரும் வராததால், அந்த சதையை புதைத்துவிடுகிறார்கள். இந்த நேரத்தில் தான் அவர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள். இரண்டு உடல் பாகங்களை புதைத்திருக்கும் இடத்தை போலீசிடம் காட்ட, அவர்களும் அந்த உடல்களை மீட்கிறார்கள். அதன் பிறகு, அவரகளை போலீசும் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். உடல் பாகங்களை மீட்க்கப்பட்டாலும், யாருடைய உடல்கள் என ரோஸ்லின் குடும்பத்தினராலும், பத்மா குடும்பத்தினராலும் சொல்ல முடியவில்லை.
இந்த குற்றவாளிக்கு ஆதரவாக பி.ஏ.ஆளூர் என்ற வழக்கறிஞர் ஆஜராகி, இந்த குற்றத்துக்கு அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமுமே இல்லை. இவர்களை பிடித்து பொய்யாக வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய் என வாதாடுகிறார். விசாரணை ஒன்றரை வருடமாக நடக்கிறது. இதற்கிடையில், கேரளா கோர்ட், அவர்களுக்கு பெயில் தர மறுக்கிறது. இந்த வழக்கு ஹை கோர்ட்டுக்கு செல்கிறது. முதல் குற்றப்பத்திரிக்கை `1000 பக்கங்களையும், இரண்டாவது குற்றப்பத்திரிகை 3000 பக்கங்களையும் கொண்டிருக்கிறது. 40 சாட்சியங்களையும், தடயங்களையும் வைத்துகொண்டு விசாரணை இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. முகமதி ஷபி மீது ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. 70 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து பாட்டியின் பிறப்புறுப்பை தனியாக வெட்டி எடுத்து அந்த ரத்தங்களை தன் வீடு முழுவதும் தெளித்திருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகிறது.