Skip to main content

சடலத்தை மறைத்து வைத்துக்கொண்டு சினிமா பார்த்த சைக்கோ பெண்கள் - திலகவதி ஐ.பி.எஸ். பகிரும் தடயம்: 45

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 thilagavathi-ips-rtd-thadayam-45

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விளக்கி வருகிறார். அந்த வகையில், இந்தியாவையே உலுக்கிய காவிட் சிஸ்டர்ஸ் கேஸை பற்றி விவரிக்கிறார்.

இந்த வழக்கு மஹாராஷ்டிராவில் நடந்தது. நாசிக் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீபா என்பவர், தன் கணவன் மோகன் காவிட் சொந்தக்காரர்கள் வந்து தன் குழந்தையை கூட்டிச் சென்றார்கள் என்கிறார்கள். ஆனால் கணவனின் முதல் மனைவி அஞ்சனாபாயின் 24 வயது மகள் ரேணுகாவும் அவரது தங்கை சீமாவும் என்பவர்களும் தன் 9 வயது மகளை கடத்திவிட்டதாக புகார் அளிக்க, கேஸை விசாரிக்கின்றனர். அந்த பெண்மணிகளின் விலாசம் அறிந்து நேரில் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு வெவ்வேறு வயதிலுள்ள குழந்தைகளின் ஆடைகளும், பெட்டி, வீட்டின் சுவர் என்று ரத்தக்கறை படிந்திருக்கிறது. விரைவாக இரு சகோதரிகளையும், ரேணுகாவின் கணவரையும் பிடித்து விசாரிக்க, இரண்டாவது பெண் சீமாவும் ரேணுகாவின் இரண்டாவது கணவனான கிரண் ஷிண்டே என்பவரும் ஒத்துழைத்து 1990 முதல் 1996 வரை கடந்த ஆறு வருடங்களாக என்ன நடந்தது என்று உண்மையை சொல்லி விடுகின்றனர்.

அஞ்சனா பாய் என்பவர் குழந்தையாக ரேணுகா இருந்தபோது கணவனால் கைவிடப்படுகிறார். இரண்டாவதாக எக்ஸ் ஆர்மிமேன் மோகன் காவிட் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு பிறந்தவரே சீமா என்பவள். அஞ்சனா பாய்க்கு  பிக்பாக்கெட் அடிப்பது, செயின் திருடுவது என்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தும் பழக்கம் இருக்கிறது. கணவன் மோகன் காவிட் எவவ்ளவு சொல்லியும் அந்த பழக்கத்தை திருமணம் பிறகும் விடவும் முடியாமல், தனது இரண்டு மகள்களுக்கும் விளையாட்டு போல சிறு வயதிலிருந்தே பழக்கி விடுகிறாள். மூவரும் சேர்ந்து இப்படி பல வருடமாக கூட்டம் நிறைய சேரும் ஊர்களுக்கு  சென்று தங்கி திருடி வருகின்றனர்.  மூவரும் ஐந்து வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து திருடினால் சந்தேகம் வராது தப்பித்து கொள்ளலாம் என்று அதில் இறங்குகின்றனர். கைக் குழந்தையையும் நயவஞ்சகமாக பேசி கடத்தி அதனை வைத்து பல இடங்களில்  திருடுகின்றனர். தொடர் அழுகையினால் தொழில் பாதிக்க அதனையும் கொடூரமாக இரும்பு ராடை வைத்து அடித்து கொன்று தப்பிக்கின்றனர்.

அடுத்ததாக விக்டோரியா டெர்மின்ஸ்சில் மேலும் நான்கு, ஐந்து குழந்தைகளை கடத்துகின்றனர். அதில் ஸ்வாதி என்னும் குழந்தை இவர்கள் ஊர் ஊராக மாறும்போது இவர்களிடம் இருந்து அதிஷ்டவசமாக தப்பித்து விடுகிறது. மேலும் ஒரு குழந்தையை ஆறு மாத காலத்திற்கு மேல் வைத்திருப்பதில்லை என்பதால், கடத்திய மீதி இருக்கும் இரண்டு வயது குழந்தையையும் படியில் தள்ளி கொடூரமாகத் தாக்கியும், திருடி கூட்டத்தில் மாட்டும்போது குழந்தையை அடிபட வைத்து திசை திருப்பியும், பின்னர் மொத்தமாக கொன்று சடலங்களை ஆங்காங்கே போகும் வழியில் போட்டு விடுகின்றனர்.

இவர்கள் இப்படியே கொலைகளை அடுக்கிக் கொண்டே போக, காவல்துறையிடம் மாட்டிக்கொள்ள அமைந்தது பின்வரும் சம்பவங்கள். இப்படி ஒருமுறை கடத்திய குழந்தையை பெட்டியில் அடக்கி அந்த மூன்று பெண்மணிகளும், ஒரு ஆணும் கோலாப்பூரில் ஒரு லாட்ஜில் தங்குகின்றனர். லாட்ஜ் மேனேஜர் சந்தேகம் கொள்கிறார். பின்னர் இறந்த அந்த குழந்தையின் சடலத்துடன் சினிமா தியேட்டருக்குச் சென்று அங்கு இருட்டாக ஒதுக்குபுறமாக இருக்கும் பொது கழிவறையில் சடலம் இருக்கும் சாக்கை வைத்துவிட்டு வருகிறாள் ரேணுகா. வரும்போது அங்கிருக்கும் ஆணியில் இவள் புடவை மாட்டி இழுக்கையில் ஒரு சிறு துணி பகுதி மாட்டிக் கொள்கிறது. மூன்று நாட்கள் கழித்து துர்நாற்றம் வந்ததை அடுத்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்து கேஸ் ரிஜிஸ்டர் செய்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அடுத்ததாக பாம்பேவுக்கு புறப்பட்டு அங்கே விட்டல் என்னும் கோவிலில் மூன்று வயது குழந்தையை கட்டி தூக்கி வந்து சிறிது நாள் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் நன்றாக பேசும் அந்த குழந்தை அருகில் இருக்கும் வீடுகளில் சென்று, தன் பெயர் பங்கஜ் என்றும் தன் வீடு பாம்பேயில் இருப்பதாகவும் சொல்லி விடுகிறது.

அக்கம்பக்கத்தினர் சந்தேகம் கொள்ள இனிமேல் அந்தக் குழந்தையை வைத்திருப்பது ஆபத்து என்று ஆத்திரமடைந்து வீட்டுக்குள்ளேயே காலில் கயிறைக் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு பொட்டலம் போல இரு பக்க சுவற்றில் அடித்தே கொன்று விடுகின்றனர். சடலத்தையும் வழக்கம் போல சாக்கில் வைத்து அங்கிருக்கும் கோவிலில் வைத்து விடுகின்றனர். தகவல் அறிந்ததும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவு அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது சிறுவனின் உடலைக் கண்டுபிடித்து, கேஸ் ரிஜிஸ்டர் செய்யப்படுகிறது. இப்படி ஆங்காங்கே குழந்தைகள் சம்பந்தமான கொலைகளின் கேஸ் பைல்  செய்யப்பட்டு வருகிறது.

மற்றவை அடுத்த தொடரில் காண்போம்...