Skip to main content

பேரழகு நடிகை ராணி பத்மினியின் கொலை வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 25

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-25

 

நடிகை ராணி பத்மினியின் கொலை வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்

 

1986 ஆம் ஆண்டு பிரசாத் என்பவர் ஒரு பிரபலமானவரின் வீட்டின் கதவைத் தட்டினார். கதவு திறக்கப்படவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். ஆறு பெரிய அறைகளைக் கொண்ட தனி பங்களா அது. போலீசார் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இரண்டு பெண்களின் பிணங்கள் இருந்தன. அழுகிய நிலையில் அந்தப் பிணங்கள் இருந்தன. மருத்துவர் அழைத்துவரப்பட்டு போஸ்ட்மார்ட்டம் நடந்தது. இருவரில் ஒருவர் பிரபலமான நடிகை ராணி பத்மினி. 

 

அவருடைய உடலைக் கேட்டு யாருமே வரவில்லை. அவருடைய தாய் இந்திராகுமாரி நடிகையாக முயற்சித்து அதன் பிறகு டப்பிங் கலைஞராக மாறியவர். அவருக்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. நடிகை பத்மினி போல் தன்னுடைய பெண்ணும் தமிழ் திரையுலகை ஆள வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது. பத்மினி போல் தன்னுடைய பெண்ணையும் பப்பி என்றே அவர் அழைத்தார். தன்னுடைய பெண்ணை திரைப்படக் கல்லூரியில் சேர்த்துவிட்டு நடிப்புக்கான பயிற்சி கொடுத்தார். 

 

இந்தி திரையுலகில் தன்னுடைய மகளை அறிமுகப்படுத்தலாம் என்கிற அவருடைய எண்ணம் பலிக்கவில்லை. அதனால் அவர் சென்னை வந்தார். 1981 ஆம் ஆண்டு ராணி பத்மினிக்கான முதல் வாய்ப்பு கிடைத்து படம் வெளியானது. அடுத்தடுத்து பல படங்களில் அவர் கமிட்டானார். பிசியான நடிகையாக மாறினார். கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அவர் நடித்தார். ஐந்து வருடங்களில் 41 படங்களில் அவர் நடித்தார். தாயும் மகளும் நண்பர்கள் போல் இருந்தனர். தனி பங்களாவுக்கு அவர்கள் குடிபெயர்ந்தனர். 

 

அந்த வீட்டுக்கு வாட்ச்மேன், டிரைவர், சமையல்காரர் ஆகியோரை பணிக்கு சேர்த்தனர். அந்த பங்களாவை சொந்தமாக வாங்கலாம் என்று இருவரும் முடிவு செய்தனர். இடையில் டிரைவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தக் கோபத்தில் வாட்ச்மேன் மற்றும் சமையல்காரரோடு சேர்ந்து வீட்டிலிருக்கும் அனைத்தையும் கொள்ளையடிக்க வேண்டும் என்று அவர் திட்டம் போட்டார். கொள்ளையடிக்கும்போது இந்திராகுமாரி பார்த்துவிட்டதால் அவர் கொல்லப்பட்டார். அவருடைய கண்முன்னே ராணி பத்மினியை அவர்கள் மூவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவரையும் கொன்றுவிட்டு மூன்று பேரும் தப்பித்தனர்.

- தொடரும்