தான் சந்தித்த ஒரு கொலை வழக்கு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் 'சொல்ல மறந்த கதை' தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியம். கொரோனா காலத்துக்குப் பிறகு இப்போது தான் நாம் மீண்டு வருகிறோம். எனவே அனைவருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம் என்பது என்னுடைய கருத்து. உடல் நன்றாக இருக்கும்வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆஸ்பத்திரியில் சேரும்போதுதான் பலருக்கு இன்சூரன்ஸ் குறித்த ஞாபகமே வருகிறது. அரசாங்க மருத்துவமனைகளில் சேர்வது என்பது இப்போது மிகவும் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. மாத வருமானம் 12,000 ரூபாய்க்குக் கீழ் இருக்கும் அனைவருக்கும் இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தும்.
ஒரு குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் வரை இதில் இலவச காப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய் பிரீமியம் கூட நாம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. கையில் அந்த கார்டை மட்டும் வைத்திருந்தால் போதும். தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும். உலக சுகாதார நிறுவனமே நமது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தைப் பாராட்டியுள்ளது. ஒருமுறை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒரு சிம் கார்டு கிடைக்கிறது. அது சிம் கார்ட் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
வனத்துறை அதிகாரியிடம் சென்று அதை அவர்கள் கொடுத்தனர். அவர் அதை ஒரு போலீஸ்காரரிடம் கொடுத்தார். அவர் அதை தன்னுடைய ஃபோனில் போட்டு செக் செய்து பார்த்தார். அதில் ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்தன. அந்த நம்பருக்கு அவர் கால் செய்தபோது, அது தன்னுடைய கணவரின் நம்பர் என்று ஒரு பெண்மணி தெரிவித்தார். டூரிஸ்ட் வண்டிகளில் டிரைவராகப் பணிபுரிந்த தன்னுடைய கணவரை மூன்று மாதங்களாகக் காணவில்லை என்று அவர் தெரிவித்தார். சிம் கார்டை சோதித்தனர். வாடகைக் காரை எடுத்து, டிரைவரைக் கொன்றுவிட்டு, காரை வேறு மாநிலத்தில் விற்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று இதில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
அந்த ரவுடிகளைக் கண்டறிந்து கைது செய்தோம். தாங்கள் செய்த கொலையை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அந்த டிரைவரின் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் பணத்தை வழங்கினோம். ஆடு மேய்க்கும் சிறுவர்களால் இந்த வழக்கைக் கண்டுபிடிக்க முடிந்தது. காரை ஓட்டிச் செல்லும் டிரைவருக்கு மட்டுமல்லாமல் அதில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மன்னர்கள் காலத்திலிருந்து ஊழல் என்பது இங்கு இருக்கிறது. மனிதன் இருக்கும் இடத்திலெல்லாம் ஊழல் இருக்கும்.