தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், காதலிக்கும் பையனுக்கும், அவனுடைய அம்மாவுக்கும், பையனுக்கும் கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு அம்மா கவுன்சிலிங்கிற்காக வந்தார். 12ஆம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகன், இப்போது சரியில்லை என்றார். பாதை தவறி போய், பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். படிக்கும் நேரத்தில், காதலிப்பது கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறான். இதனால் அவன் மீது அதிகமாக அக்ரஸிவ் ஆகிறேன். சரியில்லாத பையன் மாதிரியே அவனிடம் பேசுகிறேன். இது அவனை பாதித்துவிட்டதா எனத் தெரியவில்லை. அவன் லாஸ்ட் மனநிலையில் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அவன் காதலிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி முடித்தார்.
இப்போது நான் பேச ஆரம்பிக்கிறேன். டீன் வயதில் ஹார்மோன்ஸ் மூலம், இன்னொரு எதிர்பாலினத்தவரை நோக்கி ஈர்ப்பு வருமா? வராதா எனக் கேட்டதற்கு இருக்கும் சார் என்றார். ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்த பையனை பற்றி சொல்கிறேன். 17 வயது பையன், எதிர்பாலின ஈர்ப்பில்லாமல் எந்த பெண்ணிடம் பேச மாட்டிக்கிறான், தன்பாலின ஈர்ப்பாளாராக இருப்பானோ என்று அவனுடைய பெற்றோர் கவுன்சிலிங்கிற்காக வந்தனர். அவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்த அம்மாவிடம் கேட்டேன். 12வது படிக்கும் பையனுக்கு, எதிர்பாலின ஈர்ப்பு இருக்க தான் செய்யும். அப்படி இருப்பதும் நல்ல விஷயம் தான் என்றேன். அவன் படிக்காமல் போனால் தான் தவறு. காதலிப்பதால் தான் அவன் படிக்காமல் போகிறான் என்று குழப்பிக் கொள்ளக்கூடாது. பையனிடம் பேசுகிற விஷயத்தில் பேசினால் தான், அவன் படிப்பை நோக்கி நகர ஆரம்பிப்பான்.
அடுத்ததாக, பையனிடம் பேச ஆசைப்பட்டு அவனிடம் பேச ஆரம்பிக்கிறேன். பையன் மிகத்தெளிவாக இருக்கிறான். தானும், அந்த பெண்ணும் காதலிப்பது உண்மை தான். கஷ்டப்பட்டு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் தன்னுடைய கனவு. காதலிப்பதால், படிப்பு விஷயத்தில் கவனம் சிதறுவது உண்மை தான். ஆனால், படித்துவிடுவேன் என்றான். 12ஆம் வகுப்பு எக்ஸாம்மில் தேர்வு ஆவதற்கு முழு கவனமும் படிப்பில் தான் இருக்க வேண்டும். காதலிப்பது உங்களுடைய விருப்பம். ஆனால், படிப்பு என்பது கட்டாயமான விஷயம் என்று சொன்னதற்கு இரண்டையும் விட முடியாது வேண்டுமென்றால் என்னை கைட் செய்யுங்கள் என்றான். பொண்ணுங்க பின்னாடி எப்போது சுத்துவது மாதிரியாக அம்மா பேசுகிறார். திட்டாமல் என்னை கைட் செய்யுங்கள் என்று அம்மாவிடம் சொன்னாலும் பெண்களுக்காவே இருப்பதாக என்னை திட்டுகிறார். காதலிக்கும் பெண்ணை தவிர எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை அந்த பெண்ணிடமும், பெற்றோரிடமும் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது. கொலை குற்றம் செய்தது மாதிரி வீட்டில் பேசுகின்றனர். முன்னாடி 95% மார்க் எடுப்பேன். இப்போது 90% மார்க் எடுத்திருக்கிறேன். இது தான் இவ்வளவுக்கும் பிரச்சனை என்று அந்த பையன் சொல்கிறான்.
மேலும் அவன், ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்பது ஒரு நல்ல உணர்வு தானே. இந்த விஷயத்தை அந்த பெண்ணிடமும், பெற்றோரிடமும் பகிர்ந்ததால் என்ன தவறு இருக்கிறது? ஒரு பெண்ணையோ அல்லது பெண் ஒரு பையனை காதலித்தால் ஏன் அவர்களின் கேரக்டர் மிகவும் ஒர்ஸ்ட் கேரக்டர் எனப் பேசுகிறோம். இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது சார். இப்பவும் நான் நல்லா படிக்கிறேன் என்று சொல்லி வருத்தப்பட்டான். அதனை தொடர்ந்து, அந்த அம்மாவை அழைத்து பேசுகிறேன். பையனுடைய வாழ்க்கையில் இரண்டு பகுதி இருக்கிறது. ஒன்று, அந்த வயதிற்கே உண்டான ஈர்ப்பு. அது அந்த பையனிடம் இருக்கிறது. அதற்கு நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். படிப்பு விஷயத்திலும் தன்னை சரிசெய்து கொள்வதாகச் சொல்கிறான். இதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிறான் என்று அந்த அம்மாவிடம் சொல்கிறேன். படிப்பு விஷயத்தில் கொடுக்கவேண்டிய சப்போர்ட்டை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட பெண் பித்தன் மாதிரி இந்த பையனை அவனது பெற்றோர்கள் டீரிட் செய்திருக்கிறார்கள். இப்படி வைக்கலாமா என்று கேட்கும் போது தான் அந்த அம்மாவுக்கு புரிய ஆரம்பிக்கிறது. அதன் பின்னர், அந்த பையனும், தேர்வு நடக்கும் வரை என்னிடம் கைடன்ஸ் எடுத்துக்கொண்டு நல்ல மார்க் வாங்கி டாக்டர் சீட் கிடைத்து காலேஜில் படிக்கிறார். இதோடு இந்த கவுன்சிலிங் முடிவுக்கு வந்தது.