Skip to main content

மொத்த குடும்பமே செய்த மோட்டிவேஷன்; இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 60

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
jay zen manangal vs manithargal 60

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மோட்டிவேஷன் என்ற பெயரில் குடும்பம் செய்த டார்ச்சரால், ஸ்போர்ஸை வெறுத்த பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கூட டென்னிஸ் விளையாட்டு மீது உயிராக இருக்கும் ஒரு பெண் இருக்கிறார். இவரை, இவருடைய அம்மா மோட்டிவேட் செய்கிறார். அதன் பிறகு, இவரது குடும்பத்தில் உள்ள அப்பா, தாத்தா, மாமா என அனைவரும் மோட்டிவேட் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில், இந்த பெண் தான் மெடல் வாங்குவாள் என்று மற்றவர்களிடம் இந்த பெண்ணை பற்றி புகழ்பாடிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில், கோச்சாக வந்த அவரும், இந்த பெண்ணுக்கு மோட்டிவேட் செய்கிறார். மோட்டிவேஷன் என்பது, ஆர்டிஃபிசியலாக செய்யப்படுகிற ஹைப் தான். ஒரு இடத்தில் இருப்பவர்களை, இன்னொரு இடத்திற்கு இழுப்பதற்காக சொல்லப்படுகிற வார்த்தை ஜாலம் தான் மோட்டிவேஷன். அது மாதிரி, ஒரு மேட்சில் இந்த பெண் வெற்றி பெற்றால், இவள் தான் அடுத்து ஒலிம்பிக்கில் மெடல் வாங்கப்போவாள் என்று பேசுவார்கள். ஒரு வேளை அந்த மேட்ச்சில் தோற்றால், விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்று அந்த பெண்ணை குறைக் கூறி கொண்டிருப்பார்கள். 

மோட்டிவேஷன் செய்வதை விட செஃல்ப் ரியலிஷேசனை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். 10 மேட்ச் விளையாடினால் 4 மேட்ச் தோற்பாய் என்பதை குழந்தைகளிடம் ரியாலிட்டியை சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்த லாஜிக் எல்லாம் அந்த பெண்ணிடம் சொல்லும் போது, தன்னிடம் இருந்த பாரம் இறக்கி வைத்த மாதிரி உணர்வதாக அந்த பெண் சொன்னாள். ஏனென்றால், 10 மேட்ச் விளையாடினால், 12 மேட்ச் இந்த பெண் ஜெயிப்பார் என்று அவர்கள் அனைவரும் இவரை மோட்டிவேட் செய்திருக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், கோச்சும் இந்த பெண்ணை அதிகளவில் மோட்டிவேட் செய்திருக்கிறார். இவர்கள் மூன்று பேர் மோட்டிவேட் செய்ததிலும், அந்த நேரத்தில் இந்த பெண் ஒரு மேட்ச்சில் சூப்பராக விளையாடியதால் அவரும் சேர்ந்து மோட்டிவேட் செய்திருக்கிறார். 

இப்படி மோட்டிவேட் செய்து செய்து, இனிமேல் டென்னிஸ் விளையாட மாட்டேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். டென்னிஸ் விளையாட முடியாததால், ஏற்பட்ட மன அழுத்தத்தால், விரக்தியின் உச்சத்திற்கு வந்த போது தான் இந்த பெண்ணை நான் சந்தித்தேன். ஒருவேளை, கொஞ்சம் முன்னாடி நான் வந்திருந்தால், அவருடைய நிலைமையை சரிசெய்து டென்னிஸ் விளையாட செய்திருக்கலாம். மோட்டிவேட் என்ற பெயரில், இந்த பெண்ணின் வாழ்க்கையையே அவர்கள் கலங்கடித்துவிட்டார்கள். அதன் பிறகு, இந்த பெண் டென்னிஸ் விளையாட்டை கடைசி வரை விளையாடாமல் திருமணம் செய்து கொண்டார் என்று நினைக்கிறேன். தான் விரும்பும் டென்னிஸ் விளையாட்டை தானே கிண்டல் செய்யும் நிலைமைக்கு அந்த பெண்ணை அந்த குடும்பம் தள்ளிவிட்டது. இதை மோட்டிவேஷன் என்றே சொல்லக்கூடாது, ஆனால் மோட்டிவேஷன் என்ற பெயரில் இது தான் நிறைய இடத்தில் நடக்கிறது.