Skip to main content

ஒரே குடும்பத்தில் இரண்டு டீம்; பெற்றோரால் குடும்பத்தைப் பிரித்த குழந்தைகள் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 56

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
jay zen manangal vs manithargal 56

தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், டீம் டீமாக பிரிந்து கிடந்த குடும்பத்துக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.

வீட்டில் பிரச்சனை என்று அம்மாவும் பையனும் வருகிறார்கள். தனக்கும் கணவருக்கும் ஒத்துப்போகாமல் பிரச்சனை வருகிறது என்று அந்த அம்மா ஆரம்பிக்கிறார். அம்மாவும் பையனும் ஒரு டீம், அப்பாவும் பெண்ணும் ஒரு டீமாக இருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் மூன்றாவதாக ஒரு குழந்தையாக பிறக்கிறது. இந்த குழந்தை பிறந்து 6,7 வருடம் கழித்து வரும் போது இந்த குழந்தை எந்த டீமில் சேர்வது தான் பிரச்சனை. கணவரிடம் பிடிக்காத விஷயங்களை மகனிடம் சொல்லி, அதை மகன் தன் அப்பாவிடம் கேட்டுவிடுவார். இதில் தனக்கு ஒரு ஆள் இருக்கிறது என்று அம்மாவுக்கு ஒரு சந்தோஷம். அந்த கேள்விக்கான பதிலை அப்பாவுக்காக மகள் சொல்வாள். இப்படியாக செல்லும் இவர்களது வாழ்க்கை ஒரு கட்டத்தில் பிரச்சனையாக வருகிறது. இப்படி டீம் டீமாக உளவியலாக பிரச்சனையாக மனதுக்குள் வந்து, அப்பாவும் அக்காவும் தப்பு என்று ப்ரூப் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மகன் செய்கிறார். அதே மாதிரி, அம்மாவும் தம்பியும் தப்பு என்று ப்ரூப் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மகள் செய்கிறார். அம்மாவும் மகளும் சண்டை போடுவார்கள். அதே போல், அப்பாவும் மகனும் சண்டை போடுவார்கள். இதற்கிடையில், இவர்களுக்குள் மூன்றாவது குழந்தை பிறந்து 6,7 வருடங்கள் ஆகிறது.

குடும்பத்தில் கிட்டத்தட்ட இரண்டு டீமாக உருவாகியிருக்கிறது. எங்கு வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், டீம் டீமாக தான் செல்வார்கள். இதுவே இவர்களுக்குள் பிரச்சனையாக வருகிறது. இது ஒரு கட்டத்தில், பையனுக்கு திருட்டு பட்டம் கட்டுவதற்கான திட்டத்தை பெண் போடுகிறார். அதே போல், பெண்ணுடைய புத்தகத்தில் ஏதோ ஒன்றை எழுதி அப்பாவிடம் இதை சொல்லி மகன் சண்டை போடுகிறான். மூன்றாவதாக பிறந்த அந்த பையனை யார் டீமில் சேர்ப்பது தான் பிரச்சனை. அவனை ஈர்ப்பதற்காக பல விஷயங்களை செய்கிறார்கள். இதுவே பிரச்சனையாக வந்து ஒரு கட்டத்தில் மீறி போகும்போது தான் என்னிடம் வந்து விஷயத்தை சொன்னார்.

நான், அந்த குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் வரவழைக்கிறேன். மூன்று குழந்தையையும் எதிரில் அமரவைத்து, அப்பா அம்மாவை ஒன்றாக அமர வைக்கிறேன். இதையே, அந்த பெண்ணால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்பா அம்மாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று குழந்தைகளிடம் கேட்க, ஒரு குழந்தை பதில் சொன்னால் இன்னொரு சண்டைக்கு வருகிறது. இப்போது தான் பிரச்சனையில் தீவிரத்தை அம்மா அப்பா உணர்கிறார்கள். அதன் பின்னர், மற்ற நால்வரிடம் உள்ள நல்ல விஷயங்களை சொல்லுமாறு ஒரு குழந்தையிடம் கேட்கிறேன். முதலில் எதுவும் இல்லை என்ற சொன்ன பிறகு, ஒவ்வொருவரும் மற்ற நால்வரிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பற்றி சொல்கின்றனர். நான் ஒரு கவுன்சிலராக, அவர்கள் சொன்ன விஷயங்களை நோட் செய்து அவர்களுக்கு புரியும்படி அதை விளக்கிக்கொண்டே வருகிறேன். இப்படி அவர்கள் அனைவரும் சொல்லி முடிக்கும் போது அந்த இடமே அமைதியாக இருக்கிறது. இப்போது என்ன பிரச்சனை என்று குழந்தைகளிடம் கேட்கிறேன். தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். 

அதன் பிறகு, சின்னதாக எக்ஸர்சைஸ் ஒன்றை செய்கின்றேன். எக்ஸர்சைஸின் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொருவர்களிடம் உள்ள மூன்று நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்கிறேன். அதன் பின்னர், பெரிய ஆளான பிறகு என்னவாக ஆக விருப்பப்படுகிறீர்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன். இப்போது, ஐந்து பேரிடம் உள்ள மூன்று நல்ல விஷயங்களை வைத்து, தங்களின் கனவுகளை எப்படி பெறுவீர்கள் என்று படிப்படியாக கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு, அவர்களை வட்டமாக நிக்க வைத்து, மற்றவர்கள் பற்றி சொன்ன நல்ல விஷயங்களை அவர்களிடம் சொல்லி கண்களை பார்த்து சிரித்துக்கொண்டே கைகுலுக்கிக் கொள்ள சொன்னேன். இப்படியாக ஒவ்வொருவரும் சொல்லி முடித்த பின்னர், பையனுக்கு தான் முதலில் கண்ணீர் வருகிறது. அப்பா நல்லவர் என்று பையனும், தம்பி நல்லவன் தான் பெண்ணும் கூறினர். இங்கு என்ன செய்தோம் என்றால், விதைக்கப்பட்ட பழையதை வெட்டி எரிந்துவிட்டு புதிதாக நடுகிறோம். கடைசியாக அவர்கள் பேசி சிரிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்போது நான் விளையாட்டாக, அப்பா சரியில்லாத ஆள் தானே என்று கேட்கிறேன். அதற்கு அந்த பையன், சிரித்துக்கொண்டே எங்க அப்பா எப்போது நல்லா தான் இருக்கிறார் என்கிறான். அதே போல், அம்மாவை பற்றி பெண்ணிடம் கேட்கிறேன். அவளும், எங்க அம்மா நல்லவர் தான் என்கிறாள். கடைசியில் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இப்போது அந்த கடைசி பையன், இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்கிறான். அதன் பிறகு, குழந்தைகளை எல்லாம் அனுப்பிவிட்டு அம்மா அப்பாவுக்கு தனியாக செக்‌ஷன் ஆரம்பித்து கவுன்சிலிங் கொடுத்த பிறகு தான் அவர்களும் புரிந்துகொண்டார்கள். கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சனை வந்தால் நீங்களே பேசிக்கொள்ளுங்கள், குழந்தைகளிடம் கொண்டு செல்லாதீர்கள் என்றெல்லாம் சொல்லி புரிய வைத்தேன்.