தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், கண்கள் தெரியாத நபர் உணர்த்திய பாடம் பற்றி விளக்குகிறார்.
கண்கள் தெரியாத மாற்றுத்திறனாளி ஆணுக்கு, நன்றாக இருக்கும் மனைவி. இவர்களுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். பையன் இன்னும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அந்த குடும்பம் என்னிடம் வந்தார்கள். பையன் படிப்பதற்காக என்ன என்ன விஷயங்கள் பேச வேண்டுமோ அதையெல்லாம் சொன்னேன். வழக்கமாக நடைபெறும் கவுன்சிலிங் போல், இது இல்லை.
அந்த மாற்றுத்திறனாளி ஆணிடம் பேச பேச, அவரிடம் நல்ல நல்ல விஷயங்கள் இருப்பதை நான் கவனிக்க ஆரம்பிக்கிறேன். நன்றாக இருக்கும் மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கும் உங்களுக்கு, கண்கள் தெரியவில்லையே என்றாவது யோசித்தது உண்டா? இந்த வாழ்க்கையை எப்படி நகர்த்தி கொண்டிருக்கிறீர்கள்? என்றெல்லாம் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், எல்லோருக்கும் ஐந்து சென்ஸ் இருக்கும். ஆனால், என்னிடம் இருக்கும் நான்கு சென்ஸை வைத்து இந்த உலகத்தை பார்க்கிறேன். எல்லோருக்கும் இருக்கும் ஐந்து சென்ஸுக்கு, நான்கு சென்ஸ் வைத்திருக்கும் நான் சமமாக வர வேண்டுமென்றால் ஆறு விஷயங்களை செய்தால் மட்டுமே அது நடக்கும். இந்த பிளைண்ட்ங்கிற சவாலை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் படிக்க முடியும், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நோக்கி செல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார். அதற்காக அவர், வருடத்திற்கு புதிய ஸ்கில்லை கற்று கொண்டுள்ளார். அவரை இன்ஸ்பிரேஷனாக பார்க்கக்கூடிய ஏதோ ஒரு செயலை அவர் செய்துகொண்டே இருந்துள்ளார்.
நான் நார்மலாக இருப்பதற்கே இன்ஸ்பிரேஷனாக இருக்க வேண்டும். இன்ஸ்பியிரிங்காக இருந்தால் நான் நார்மல் என்று அவர் சொன்ன வார்த்தை நன்றாக இருந்தது. கண்கள் தெரியவில்லை என்பது முடிந்த விஷயம் தான். ஆனால் அதற்காக என்னை சுப்பீரியராக வைத்திருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். மனைவியை நன்றாக புரிந்துகொள்கிற கணவன் நான். நீங்கள் வேண்டுமென்றால் எனது மனைவியிடம் கேட்டுப்பாருங்கள் என்றார். அதற்கு அவரது மனைவி சிரித்துக்கொண்டே, கண்கள் இருக்கும் நபர்கள் கூட இப்படி நம்மை புரிந்துகொள்வாரா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எனக்கு என்ன தேவைகள் இருக்கிறது என்பதை எனக்கு முன்னே அவர் சொல்லிவிடுவார் என்றார். அதற்கு அந்த மாற்றுத்திறனாளி, கண்கள் இருந்து தப்பு செய்தால் இந்த உலகம் எதுவும் சொல்லாது. ஆனால், கண்கள் இல்லாமல் தவறு செய்தால், மனைவி பரிதாப்படுவார் அல்லது இந்த உலகம் மனைவியிடம் பொறுத்துப்போக சொல்லும். இந்த வார்த்தையே வரவேக்கூடாது என்பதற்காக ஒரு சிறப்பான கணவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என்றார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளிடம், அன்றைக்கு நடந்த விஷயங்களையும் குழந்தைகள் சொல்ல அவர் கேட்கிறார். இந்த மாதிரி ஒரு அப்பாவை பார்க்க முடியுமா என்று குழந்தைகள் சொல்கிறார்கள்.
ஒரு சென்ஸ் இல்லை என்பதற்காக இன்னும், நாம் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை நோக்கி அவர் நகர்ந்துகொண்டே இருக்கிறார். கண்கள் இல்லையென்றாலும், அவரால் முடிந்த வரை வரைந்து பார்க்கிறார். நிறைய விஷயங்களை செய்தால் தான் இந்த உலகம் நம்மை நார்மலாக மதிக்கும் என்ற நோக்கத்தில் பலவற்றையும் செய்து வருகிறார். என்னிடம் இருக்கும் குற்ற உணர்ச்சிகள் போவதற்கு, சிறப்பான விஷயங்களை செய்தால் தான் நானே என்னை மதிப்பேன். அதுதான் ரொம்ப முக்கியமானது என்றார். வழக்கமான கணவன் மனைவிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அவர் செய்கிறார். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால், குழந்தைகளை பக்கத்தில் வரவழைத்து அவர்கள் சொல்ல சொல்ல அவரே சமைக்க ஆரம்பிக்கிறார். கண்கள் இருக்கும் நாம் ஏன் இவ்வளவு தப்பு செய்து கொண்டிருக்கிறோம் என்று அவரை பார்க்க பார்க்க எனக்கு தோன்றிகொண்டே இருந்தது. தன்னை எப்போது சூப்பர் ஷோனில் வைத்திருக்கும் போது தான், தான் ஒரு பிளைண்ட் என்பதை நியாபகபடுத்தவே இல்லை என்றார். அவர் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். பரிதாபப்படுகிற ஸ்டேட்டஸில் அவர் இல்லை. அப்படி இருக்கும் அவர், மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் அவர் கால்களை புடிக்கிறார். ஒரு சென்ஸ் இல்லை என்பதற்காக இன்னும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கும் போது, எல்லா சென்ஸும் இருக்கும் நாம் எவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் உணர்த்தினார்.