
தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், எதை சொன்னாலும் குற்றம், குறை கூறும் ஒருவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
காலேஜ் படிக்கும் ஒரு பெண், தன் அப்பாவை பற்றி பேச வேண்டும் என்று என்னிடம் வந்தார். தான் எதை பற்றி பேசினாலும், அவருடைய வாழ்க்கையை கனெக்ட் செய்துகொள்கிறார். உதாரணத்திற்கு, காலேஜில் வெளியே போகலாம் என பிளான் செய்துள்ளோம் எனச் சொன்னால், நானெல்லாம் எப்போது தெரியுமா காலேஜில் இருந்து வெளியே போனேன் என அவருடைய வாழ்க்கையை கம்பேர் பண்ணி தான் பேசுகிறார். ஒரு விஷயத்தை சொன்னால், அதை ஒரு விஷயமாக பார்க்காமல் அவருடைய வாழ்க்கை வழியாக பார்க்கிறார். அதனால், எங்களுக்கு அடிக்கடி பிரச்சனை வருகிறது எனச் சொன்னார்.
நான் அவரை வரச்சொல்ல, அவரும் என்னிடம் வந்து நான் என்ன சரி செய்ய வேண்டும் என்ற தொனியில் தான் பேசினார். அவரை தொடர்புப்படுத்தி ஒரு கதையைச் சொன்னேன். முழுவதையும் கேட்டுவிட்டு, அதுசரி நீங்கள் ஏதோ சொல்லனும்னு சொன்னீங்க அத சொல்லுங்க என்றார். அவருடைய பிரச்சனையே, ஏ டூ பி, பி டூ ஏ இந்த ஸ்டயிலில் பேசி தான் அவர் பழக்கப்பட்டிருக்கிறார். அவரை தொடர்புப்படுத்தி சொன்ன கதையையே அவரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. கம்ப்னிகேஷனில் நீ, நான் என்ற பேச்சு எப்போதும் குற்றம் குறை காண்பதாக தான் இருக்கும். இந்த பேச்சு குடும்பத்தில் உள்ள யாரோ இரண்டு பேருக்கு வந்தால், அவர்கள் பேச்சை குறைத்துக்கொண்டு அவர்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள். இதனுடைய வெளிப்பாடு கடைசி நேரத்தில் நீயா? நானா? என்ற புள்ளியில் தான் நிற்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லும்போது அவருக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிகிறது.
ஒரு விஷயத்தை பொதுவாக நடந்தது போல் சொல்லி, அதனுடைய மையக் கருத்தை மகளுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும். ஆனால், தான் தான் அப்பவே சொன்னேன். சொன்ன பேச்சை நீ ஏன் கேட்க வில்லை என்ற அதிகாரம் தான் பிரச்சனையில் வருகிறது. இந்த மாதிரியெல்லாம் சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் அவரிடம் சொல்லும்போது இப்படியெல்லாம் பேசலாமா என்ற யோசனை அவருக்குள் வந்தது. இப்போது, முதலில் சொன்ன கதை புரிகிறதா? என்று கேட்டதற்கு சாரி சார் அதை நான் ஒழுங்காக கேட்கவில்லை, மீண்டும் சொல்லுங்கள் என்றார். அதன்படி நானும் அந்த கதையை சொன்னேன். சில நேரங்களில் நீ, நான், நான் சொன்னது தான் கரெக்ட், நீ செய்தது தப்பு என்று பேசியே அதற்கு ரிசல்ட் வரவில்லை என்றால் அதைவிட்டு வெளியே வந்து வேறு எதையோ பேச வேண்டும் என்று சொன்ன பிறகு, அவருக்கு புரிய ஆரம்பித்தது. அதன் பிற்கு அடிக்கடி என்னிடம் போன் போட்டு பேசி சரியாக பேசினேனா? என்பதை தெரிந்துகொண்டு பேசுவார். ஒரு நாள், தெரு சாலையில் நடந்த சம்பவத்தை பற்றி தன் குடும்பத்திடம் சொல்லி அப்படியே போய்விட்டதாகவும், அதன் பின்னர் அவர் பேசிய பேச்சு குடும்பத்தை நல்லவிதமாக பாதித்ததாகவும் சொன்னார். முன்பெல்லாம், வீட்டுக்குள் போனால் ஒரு எஸ்.ஐ போலீஸ் ஸ்டேசனுக்கு போன மாதிரி இருக்கும். ஆனால், இப்போது வீட்டுக்கு போனால் ஒரு காலேஜுக்கு போன மாதிரி இருக்கிறது. ரொம்ப நன்றி சார் என்று சொன்னார்.