Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 18

Published on 21/12/2019 | Edited on 06/01/2020

கும்பமேளாவுக்கு கையகப்படுத்திய நிலத்தை விழுங்கிய பாஜக தலைவர்கள்!- UJJAIN SIMHASTHA KUMBH MELA SCAM (MADHYA PRADESH)


மத்தியப் பிரதேச பாஜக தலைவர்கள் ரொம்ப வித்தியாசமானவர்கள். ஊழலிலேயே ஊறித் திளைத்தவர்கள். அந்த மாநிலத்தில் உள்ள சிம்மஹஸ்தா கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவுக்காக அரசு சார்பில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், 2016 ஏப்ரலில் கும்பமேளா முடிந்தவுடன் அந்த இடத்தை பாஜக தலைவர்கள் பலர் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினர். தனிநபர்களும் ஆக்கிரமித்து வீடுகளையும், பெரிய கட்டடங்களையும் கட்டத் தொடங்கிவிட்டனர். அடுத்த கும்பமேளாவுக்குள் அந்த இடம் முழுவதையும் தனியார் விழுங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

athanur chozhan bjp  a to z part 18

 
நிலத்தை ஏப்பம் விட்டதோடு மட்டுமின்றி, கும்பமேளாவுக்காக ஒதுக்கிய நிதியிலும் 2 ஆயிரம் கோடி ரூபாயை விழுங்கிவிட்டனர். அன்றைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உஜ்ஜையினி கும்பமேளாவுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மாநில சட்டசபையில் அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்திலோ கும்பமேளாவுக்காக 4 ஆயிரத்து 471 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

athanur chozhan bjp  a to z part 18



இந்த இரண்டு தொகைகளுக்கும் இடையே வித்தியாசப்படும் 2 ஆயிரத்து 470 கோடி ரூபாய் குறித்து முதல்வர் கருத்தே தெரிவிக்கவில்லை. அதேசமயம், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை நாள் கொடியேற்றும் நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ், மீண்டும் ஒரு பொய்யை சொன்னார். கும்பமேளாவுக்கா மாநில அரசு 3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் தெரிவித்தார். கும்பமேளாவுக்கா வாங்கிய பொருட்களில் ஏராளமான விலை முறைகேடுகள் இருந்தன.
 


குஜராத் பல்கலைக்கழக நிலத்தை ஓட்டல் கட்ட கொடுத்த பாஜக அரசு!- UNIVERSITY LAND SCAM

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இரு்ககிறது நவ்ஸாரி வேளாண் பல்கலைக்கழகம். இந்த பல்கலை.க்கு சொந்தமான 65 ஆயிரம் சதுர அடி நிலத்தை, சத்ரலா இந்தியன் ஹோட்டல் குழுமத்திற்கு குஜராத் அரசு தாரை வார்த்தது. இந்த முயற்சியை பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையாக எதிர்த்ததையும் கண்டுகொள்ளாமல் நிலத்தை ஹோட்டல் கட்ட கொடுத்தது அரசு. இதன்காரணமாக 426 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது.

athanur chozhan bjp  a to z part 18


 

 
வியாபம் ஊழல்!- VYAPAM SCAM (MP)

பாஜக ஆட்சி செய்த மாநில அரசுகளில் மத்தியப்பிரதேசம்தான் மிகப்பெரிய ஊழல்களில் சிக்கிய மாநிலம் என்று உறுதியாக கூறலாம். மத்தியப்பிரதேச வேலைவாய்ப்பு தேர்வுகள் வாரியத்தில் நடைபெற்ற ஊழல் இந்தியாவில் வேறு எங்கும் நடைபெற்றதில்லை. இந்தத் தேர்வில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று அது அம்பலமானது. தேர்வு முடிவுகளில் நடைபெற்ற மோசடிகள்தான் இந்த ஊழலை வெளிப்படுத்தியது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, காப்பியடித்து தேர்வெழுத அனுமதித்தது, பதில் எழுதாமல் பேப்பரை கொடுத்து பின்னர் பதில் எழுதியது, போலியாக அதிக மதிப்பெண் வழங்கியது என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் அரங்கேறின. இந்த ஊழல் வெளியானதும் இதில் தொடர்புடை பாஜக அரசின் கல்வி அமைச்சர் லக்‌ஷ்மிகாந்த் ஷர்மா கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க, ஊழலில் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டனர். இந்த ஷர்மா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நெருங்கிய நண்பர் என்பதை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

athanur chozhan bjp  a to z part 18