அப்பாவின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மகனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
தன் பேரனை கூட்டிக்கொண்டு தாத்தா என்னிடம் வந்தார். தன்னுடைய மகன், சிகரெட் பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும், யார் பேச்சும் கேட்காமல் கெட்ட வார்த்தைகள் பேசி மகனின் நடவடிக்கை சரியில்லாமல் இருக்கிறது. இதனை கண்டு வீட்டில் இருக்கும், 8 வயது பேரனும், மகனை போல் கெட்டுப்போகிவிடுவானோ என்ற பயத்தால் அவனை கைட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாத்தா என்னிடம் வந்தார்.
பேரனை கைட் செய்வதற்கு முன்னால், அவனுடைய அப்பாவிடம் இருந்து நிறைய மாற்றங்கள் வர வேண்டும் என்று பையனுடைய அப்பாவை வரச்சொன்னேன். ஆனால், அவர், தனது மகன் வரமாட்டான் என்று சொல்லிவிட்டார். அவரை கண்டிப்பாக அழைத்து வருமாறு கூறி இந்த பையனை கைட் செய்கிறேன். ஏனென்றால், அப்பாவின் நடவடிக்கைகளை பார்த்து அந்த பையனும் அதே மாதிரி நடந்துகொண்டு, அம்மாவுக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கிறான். அப்பா பிடிக்கும் சிகரெட் தனக்கு வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். அப்பா கடைப்பிடிக்கும் கெட்ட பழக்கங்கள் குறித்து கேள்விகளை கேட்கிறான். இதை எப்படி ஹேண்டில் செய்வதென்றுஅம்மாவுக்கும், தாத்தாவுக்கும் தெரியவில்லை. மருமகளுக்கு பேரன் மரியாதை கொடுக்க மாட்டிக்கிறான் என்பது தான் தாத்தாவின் மிகப்பெரிய அக்கறையாக இருந்தது.
அந்த குழந்தையிடம் நான் பேசினேன். கோபம் வந்தால், என்ன செய்வதன்று தெரியவில்லை. அதனால், அம்மாவை திட்டுவேன் என்று சொல்கிறான். வீட்டில் தாத்தா மட்டும் தான் பிடிக்கும் என்கிறான். காலையில் சீக்கிரம் வேலைக்குச் செல்லும் அப்பா, தன்னிடம் எதுவும் பேசாமல் ஏதோ ஜூஸ் ஒன்றை குடித்துவிட்டு தூங்கிவிடுவார். அப்பா தன்னிடம் பேசாததால், தானும், அப்பாவிடம் தான் பேசுவதே கிடையாது. அந்த ஜூஸ், உடம்புக்கு சரியில்லை என்று தாத்தா சொன்னார். உடம்புக்கு சரியில்லை என்று தெரிந்த பின்னும் அப்பா ஏன் குடிக்கிறார் என்று குழந்தை தன்மையோடு அவன் கேட்கிறான்.
இந்த பையனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அம்மாவுக்கு எஜுகேட் செய்தேன். சிகரெட் பிடித்தாலோ, மது குடித்தாலோ உடம்பில் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என்ற வீடியோக்களை எல்லாம் அம்மாவுக்கு அனுப்பி வைத்து எஜுகேட் செய்து குழந்தைக்கு கற்றுக்கொடுக்குமாறு சொன்னேன். ஆனால், அந்த வீடியோக்களை பார்த்த பிறகு அப்பாவுக்கு இது மாதிரி ஆகிவிடுமா என்ற கேள்விகள் எல்லாம் அந்த குழந்தையிடம் இருக்கிறது. அவனுடைய அப்பா கடைசி வரை வரவே இல்லை. அப்பா மாறாமல், இந்த கேஸுக்கு தீர்வே கிடைக்காது.