முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒரு இளம் பெண் தனது பெற்றோரிடம் சொல்லாமல் காதலனைத் திருமணம் செய்து கொண்டு அவனுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளது. இதனால் மிகுந்த வருத்தத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் இருந்துள்ளனர். காதலனுடன் ஒன்றாக இருந்து வந்த அந்த பெண் சில நாட்களுக்குப் பிறகு வறுமையின் காரணமாக மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளது. தனது மகள் திரும்பி வந்ததே போதும் என்ற சந்தோஷத்திலிருந்த பெற்றோர் மகள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருக்கின்றனர்.
வீட்டிற்குத் திரும்பிய இரண்டு நாட்கள் கழித்து காதலன் கால் செய்து நான் இனிமேல் ஒழுக்கமாக இருபேன் என்னுடன் திருப்பி வந்துவிடு என்று அழைத்திருக்கிறான். காதலன் பேச்சால் உருகிய இந்த பெண் மீண்டும் துணிமணிகளை எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் சொல்லாமல் காதலனுடன் சென்றுள்ளது. இதையடுத்து பெற்றோர் மகள் போன சோகத்திலிருந்துவந்தனர். அதன் பின்பு ஒருநாள் வீட்டிலுள்ள நகைகளைப் பெற்றோர் தேடிப் பார்த்தபோது அதில் 50 சவரன் நகை இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்து என்னிடம் வந்து வீட்டில் நகை காணாமல் போய்விட்டது என்று கூறினர்.
அதற்கு நான் அவர்களிடம் தேடிப் பாருங்கள் இருக்கும், அதைத் தொடர்ந்து அந்த கேஸில் துப்பு துலக்கியபோது எதுவுமே கிடைக்கவில்லை. பின்பு அந்த தம்பதியிடம் காணாமல் போனதிற்கு எந்தவித துப்பும் கிடைக்கவில்லை வீட்டிற்கு யார் வந்தது போனது என்று தீவிர விசாரித்தோம். அப்போது அவர்கள் தங்களின் மகள் சில நாட்களுக்கு முன்பு வந்தாள் மீண்டும் தனது காதலுடனே சென்று விட்டாள் என்றனர். அதைக் கேட்டதும் கேஸ் முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று மகளைத் தேடிப் பாருங்கள் என்றேன் அதே போல் அவர்களும் தேடிப் பிடித்தபோது நகைகளை அடகு வைத்து மகளும் அவனது காதலனும் செலவு செய்தது ஒரு அடகுக் கடை வியாபாரி மூலம் தெரியவந்தது. அதன் பிறகு நகையை மீட்டனர்.