Skip to main content

பாத்ரூமில் இருக்கும் கணவன்; வாழ்க்கையை வெறுத்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 79

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
advocate santhakumaris valakku en 79

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

லாவண்யா என்ற பெண்ணுடைய வழக்கு இது. இந்த பெண்ணுக்கு, ஒரு வரன் வருகிறது. பெண் பார்க்கும் படலத்தில் கூட, மாப்பிள்ளை பெண்ணை பார்க்காமல் அவர் பாட்டில் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். வாவண்யாவுடைய படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்யலாம் என பையன் பெண்ணிடம் சொல்ல, பையனுக்கு திருமணத்திற்கு விருப்பம் இல்லை என பெண் வீட்டார் நினைத்துகொண்டு 3 மாதம் வரை பையன்  வீட்டாரிடம் பேசாமல் இருந்தனர். இது குறித்து, பையன் வீட்டார் கேட்கையில், அவர்கள் நடந்த விவரத்தை கூறினர். அதன் பிறகு, பையனிடம் அவனுடைய அம்மா பேசி சம்மதிக்க வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பாகவே, லாவண்யாவிடம் அவளை பற்றி குறை கூறிக்கொண்டே இருக்கிறான். அதன் பின், பெண் வீட்டாரிடம் பையனுடைய அம்மா சமாதானப்படுத்திய பின்னர், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. லாவண்யாவுக்கு 100 பவுன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி போட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். 

திருமணம் முடிந்த பிறகு விருந்துக்கு செல்லும் ஒவ்வொரு உறவினர்கள் வீட்டிலும் இவளை அங்கு தங்க வைத்துவிட்டு அங்கிருந்து சென்று ரொம்ப நேரம் கழித்து இவளை அழைத்துச் செல்கிறான். இப்படியாக 10,15 நாட்கள் செல்கிறது. பையன் வீட்டுக்கு வரும் நேரம் கொஞ்ச கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் இவன், காலை வெளியே செல்லும் பையன், இரவு லேட்டாக தான் வீட்டுக்கு வருவான். இவர்களுக்கு தாம்பத்ய உறவு ஒரு தடவை, அல்லது இரண்டு தடவை நடந்திருக்கலாம். ஆனால், ஒரு நார்மலான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கவே இல்லை. இதுபற்றி கணவனிடம் கேட்டாலும், அவன் சரியாக பதிலளிக்காமல் அவளை அலட்சியப்படுத்துகிறான். இதற்கிடையில், தனக்கு சென்னையில் வேலை கிடைத்ததாகக் கூறி, காலை சீக்கிரம் கிளம்பி இரவு லேட்டாக தான் வருகிறான். அதிக நேரம் டிராவல் செய்வதால், டயர்டாக இருப்பதாகக் கூறி சென்னையிலே தங்கி வேலை செய்து, வாரம் ஒருமுறை மட்டும் வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறான். பெற்றோரும் அதற்கு சம்மதிக்க இவன் மட்டும் சென்னையிலே தங்கி வேலை செய்கிறான்.  வாரம் ஒரு முறை கணவன், போக போக அது கூட வராமல் இருக்கிறான். வீட்டுக்கு வரும் நாட்களில் கூட பாத்ரூமில் ரொம்ப நேரம் இருக்கிறான். வெளியே வந்தால், யாருடையோ பேசிக்கொண்டு இருக்கிறான். 

இதனால் சந்தேகமடைந்த லாவண்யா, ஒரு நாள் ஆபிஸில் இருப்பதாகக் கூறிய கணவனுக்கு போன் போட்டு பேசும் போது அங்கிருந்து பாட்டு கேட்கும் சத்தம் கேட்கிறது. இதுபற்றி லாவண்யா கேட்டாலும், அவளை திட்டிவிடுகிறான். லாவண்யா வீட்டுக்கு அடிக்கடி வரும் அவளுடைய தம்பி, மாப்பிள்ளை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைகிறான். இதனையடுத்த்ய், 10 நாட்கள் தன்னுடைய வீட்டுக்கு லாவண்யா வந்து தனது பெற்றோரிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறாள். லாவண்யாவின் பெற்றோர்கள் உறவினர்களோடு பையன் வீட்டாரிடம் சென்று பேசுகிறார்கள். பேச்சுவார்த்தையில் சென்னையில், பையனோடு லாவண்யாவை தனிக்குடித்தனம் போக முடிவடுத்த பின் கணவன் மனைவியும் சென்னையில் தங்குகிறார்கள். அங்கு சென்றாலும், அந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து உரிய கம்பேனி கிடைக்கவில்லை. இரவு லேட்டாக வந்து எதுவும் பேசாமல், தூங்கி அடுத்த நாள் காலை வெளியே செல்வதுமாய் இருந்திருக்கிறான். ஒரு நாள் டூருக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்ற கணவனை, தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கிறாள். போன் போட்டு பார்த்தாலும் எந்த வித பதிலும் அங்கிருந்து வரவில்லை. பொறுத்து பொறுத்து போன லாவண்யா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து தான் லாவண்யா வேறு ஒரு வழக்கறிஞர் மூலம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோட்டீஸ் கொடுக்கிறார். 

இரண்டு பக்க நோட்டீஸுக்கு, மனைவியை குறைக்கூறியே 7 பக்கத்துக்கு பதில் நோட்டீஸ் வருகிறது. இதனையடுத்து, லாவண்யாவின் பெற்றோர், பையன் வீட்டாரிடம் சென்று பேசுகையில் அவர்கள் முகம் கொடுத்து கூட பேசவில்லை. தங்களுக்கும், இந்த விஷயத்துக்கும் சம்மந்தமே இல்லை என்று கூறிவிட்டனர். இந்த சமயத்தில், அந்த வழக்கறிஞர் நோட்டீஸை எடுத்து என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். லாவண்யாவை தனியாக அழைத்து பேசுகையில், தன்னால் அங்கு வாழ முடியாது. எப்போது என்னை பற்றி குறைகளை மட்டுமே கணவன் கூறுகிறார். அதனால் டைவர்ஸ் வேண்டும் என்று தீர்க்கமாக கூறினார். அதன் பிறகு டைவர்ஸ் போட்டோம். 100 பவுன் நகைகளை திருப்பி கொடுக்க வேண்டும் என்று ரிட்டர்ன் ஆஃப் ஆர்ட்டிக்கல்ஸ் பெட்டிசன் போட்டோம். திருமணம் ஆன செலவுகள், மெயிண்டெனன்ஸுக்கு மாதம் 50,000 கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பெட்டிசன் போட்டோம். அவன் மனைவி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததால், நாங்களும் அவன் மீது சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம். அதன் பிறகு தான், 25 லட்சம் கேட்டு பெர்மனண்ட் அலிமோனி கேட்டிருந்தோம். பேச்சுவார்த்தைக்கு பிறகு, மூன்று தவணையாக 25 லட்ச ரூபாய்யை கொடுக்க பையன் வீட்டார் சம்மதித்தனர். அதன்பிறகு, அந்த 25 லட்சமும், நகைகளையும் லாவண்யாவுக்கு வாங்கி கொடுத்த பின்பு விவகாரத்து ஆனது.