Skip to main content

மனைவி வேண்டும் குழந்தை வேண்டாம்; இராணுவ வீரரின் சேட்டை - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 64

Published on 05/08/2024 | Edited on 05/08/2024
advocate santhakumaris valakku en 64

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணுடன் வழக்கு இது. சென்னையைச் சேர்ந்த இவரது அப்பா, நீதிமன்ற வளாகத்தில் ஓ.ஏவாக இருக்கிறார். சாதாரண குடும்பம் தான். பி.ஏ வரை படித்த சாமுண்டீஸ்வரிக்கு ஒரு மிலிட்டரி வேலை பார்க்கும் மாப்பிள்ளை வரன் வருகிறது. தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க பெண்ணும் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். பெண்ணுக்கு அவரது வீட்டிலிருந்தும், அவரது பெரியம்மா வீட்டிலிருந்தும் ஒரு 25 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள்.

லீவ் முடிந்ததால் பையனும் மீண்டும் பணிக்கு செல்கிறான். தந்தையும், பெண்ணை மாமியார் வீட்டில் விட்டு, சீர்குண்டான விலையை பணமாக கொடுப்பதாக தந்தை உத்தரவாதம் ஒரு கொடுத்து, கட்டில் மெத்தைக்கு பதிலாக பாய், தலையணை ஆகியவற்றை கொடுக்கிறார். இருப்பினும், பையன் வீட்டில் நிறைய எதிர்பார்த்திருக்கிறார்கள். இதில் சங்கடமான மாமியார், உங்கள் வீட்டில் என்ன இப்படி செய்திருக்கிறார்கள் என சின்ன சின்ன விஷயமாக அடிக்கடி பெண்ணிடம் சீர் வரிசையை பற்றி குறை சொல்கிறார். இதற்கு பெண் பதிலளித்தால், எதிர்த்து பேசுகிறாள் என்ற சங்கடங்கள் முளைக்கிறது. 

உடனே பெண்ணும், தபால் ஆபீஸ் மூலமாக கணவனுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தையெல்லாம் சொல்லி தனது வீட்டுக்கு போகவேண்டும் என அடம்பிடிக்கிறார். பையனும் ஒப்புக்கொள்ள பெண்ணும் தன்னை அழைத்து போக தனது அப்பாவை வரச்சொல்கிறார். அப்போது, அந்த பெண்ணுடைய அப்பாவையும் மாமியார் அவமானப்படுத்தி அனுப்புகிறார். இப்படியாக 3 மாதங்கள் செல்ல, பையனுக்கு ஹரியானா பகுதியில் டிரான்ஸ்பர் ஆக, பெண்ணையும் அங்கேயே கூட்டிப் போகிறார். பெண்ணுக்கு போட்டிருந்த நகையெல்லாம் மாமியார் வைத்துக்கொள்கிறார். ஹரியானாவில் பையனும், பெண்ணும் சந்தோஷமாகத் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த பையன் செக்ஸ்வல் அர்ஜ் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நபர். இதனால், அந்த பெண் அதிகமாக கஷ்டப்படுகிறார். 

ஒரு வருடம் ஆன பின்னும், பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால் மருத்துவமனைக்கு சென்று பார்க்கிறார்கள். அப்போது பெண்ணுக்கு ஓவேரியன் சிஸ்ட் என்பது ஒன்று இருந்திருக்கிறது. எல்லா பெண்ணுக்கும் வரக்கூடிய இதை சீக்கிரமே மருந்து கொடுத்து சரிசெய்யலாம். அதே போல், பையனுக்கு ஸ்பெர்ம் கவுண்ட் ரொம்ப கம்மியா இருந்திருக்கிறது. இதற்கு சிகிச்சை எடுக்க பையன் மறுக்கிறான். ஒரு மூன்று மாதம் கழித்து, பையனுடைய அப்பா அம்மா, ஹரியானாவுக்கு வருகிறார்கள். பையனுடைய அம்மா, பெண் வீட்டாரைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொடுக்கிறார். இதற்கிடையில், நகையெல்லாம் திருடுபோய்விட்டதாக ஊரிலிருந்து போன் மூலமாக மாமியார் பதறுவது போல் பேசுகிறார். உடனே பதறிபோன பெண்ணும், இது குறித்து போலீஸுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்கும்படி சொல்கிறார். ஆனால், எங்கள் குடும்பத்திற்கு போலீஸ் ஸ்டேசன் போகும் பழக்கம் இல்லையென கூறி இந்த விஷயத்தை தாம் பார்த்துக்கொள்வதாக மாமியார் பதற்றமே இல்லாமல் சொல்கிறார். அதனை தொடர்ந்து, கம்ப்ளைண்ட் கொடுக்கும்படி பையன் சொல்ல அதற்கு மாமியார் ஒத்துக்கொள்கிறார். ஆனால், கம்ப்ளைண்ட் கொடுக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த பெண், இது குறித்து பையனிடம் திரும்ப திரும்ப சொல்ல, பையனும் கோபப்பட்டு பெண்ணை அடித்துவிடுகிறார். இதில் இருவருக்கும் சண்டை வருகிறது. இதனால், சென்னையில் தன் வீட்டுக்கு பெண் வந்துவிடுகிறாள். ஊரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வரும்படி, மாப்பிள்ளை எவ்வளவோ சொல்ல பெண் மறுத்துவிடுகிறாள். 

இதில் ஆத்திரமடைந்த, பையன் மனைவி மீது விருதுநகர் கோர்ட்டில் டைவர்ஸ் வேண்டும் என்று வழக்கு ஒன்று கொடுக்கிறான். நோட்டீஸ் வந்தவுடன் பெண்ணும், தந்தையும் கோர்ட்டுக்கு போகிறார்கள். அங்கு மாப்பிள்ளை பெண்ணை திட்டு சண்டை போட்டு அங்கு கடையில் இருந்த ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அவள் மீது போட்டு உடைத்துவிடுகிறான். கடைக்காரர் இது குறித்து கம்ப்ளைண்ட் கொடுக்க பையனை போலீஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்கிறது. இதற்கிடையில், பெண்ணும் நகை வேண்டும் என்றும், அபூயுஸாக திட்டுவதாகவும் கூறி பையன் மீது நடவடிக்கை கோரி கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். மேலும், எனது வீட்டில் நான் தனியாக இருப்பதற்கு நியாயப்பூர்வமான காரணங்கள் உண்டு என்று கூறி மாதமாதம் மெயிண்டெனுஸ்காக ரூ.15,000 கொடுக்கும்படி பையன் மீது வழக்கு தொடுக்கிறாள். கோவில்பட்டி கோர்ட்டில் போடப்பட்டிருந்த வழக்கை நாங்கள் சென்னைக்கு மாற்றினோம். அவன் பணம் கொடுக்க சம்மதிக்காததால், அவன் வேலை செய்யும் இடத்திற்கு, உயிர் வாழ்வதற்கான சஸ்டினல் அமெளண்ட் கூட அவன் கொடுக்காததால் மெயிண்டெனன்ஸ் வேண்டும் என கடிதம் போட்டோம். 

இதைப் பற்றி தெரிந்துகொண்ட அவன், மாத மாதம் பத்தாயிரம் கொடுப்பதாக கொடுக்கிறான். இதற்கிடையில், ராணுவத்தினர் பெண்ணை அழைக்கிறார்கள். அதன்படி, பெண்ணும் தன் தந்தையை அழைத்து அங்கு போகிறாள். அங்கு நடந்தவற்றையெல்லாம் சொல்லி,  ஐ.வி.எஃப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பையன் சம்மதிக்க வேண்டும் என்று கூறிகிறாள். ஆனால், பையன் மறுத்துவிடுகிறான். ராணுவ மருத்துவர்கள் அவனை பரிசோதித்ததில், பெண் சொன்னதை அங்கு சொல்கிறார்கள். ஆனால், தனக்கு குழந்தை வேண்டாம் என சொல்கிறான். இதில், குடும்பத்தை பாதுகாக்கும் ராணுவ அமைப்பினரும், பெண்ணுக்கு உரிய மெயிண்டெனன்ஸ் கொடுத்து பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். அதன் பின்பு, மீடியேஷனில் பேசியதில் எதுவும் ஒத்துவரவில்லை. அவன் அந்த பெண்ணுக்கு கெட்ட வார்த்தையால் அனுப்பிய மெஷேஜையெல்லாம் கோர்ட்டில் தாக்கல் செய்தோம். மீடியேட்டர் எல்லாம் பேசி கடைசியில், 5 லட்சம் மெயிண்டெனன்ஸ் கொடுப்பதாக ஒத்துக்கிட்டான். இவளுடைய 20 பவுன் நகையை வாங்கிய பிறகு, இருவருக்கும் விவகாரத்து ஆனது.